kneepain |
{getToc} $title={Table of Contents}
மூட்டு வலிக்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடும் குணமாகாத நபரா நீங்கள்?
மூட்டு வலிக்கு நீங்கள் பயன்படுத்தும் மாத்திரை உங்கள் மூட்டு வலி பிரச்சனையை குணமாக்குகிறது என்று நம்புகிறீர்களா?
உடல் உள்ளுறுப்பில் மனித தவறின் காரணமாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த பிரச்சனையின் மூலம் உடலில் வலி ஏற்படும். இந்த வலியை நம் மூளையில் உள்ள நரம்புகள் மூலம் நாம் உணர்கிறோம்.
நீங்கள் பயன்படுத்தும் பெயின் கில்லர் என்னும் வலி மாத்திரை உங்கள் மூட்டு வலிக்கு எந்த ஒரு சிகிச்சையும் செய்யாது. மாறாக மூட்டு வலியை உங்களுக்கு உணர்த்தக்கூடிய மூளையில் உள்ள நரம்புகளை வலி தெரியாமல் மறைத்து வைக்கும் அதாவது மூளையை தற்சமயத்திற்கு செயலிழக்க செய்யும். அதனால் உங்களுக்கு அந்த மூட்டு வலி என்பது தெரியாமல் இருக்கும்.
மூளையில் வலியை உணர்த்தக்கூடிய நரம்புகளை குறைந்தது 3 முதல் 5 மணி நேரம் வரை தான் செயலிழக்க செய்ய முடியும். அதன் பிறகு மூளையில் உள்ள நரம்புகள் விழித்துக் கொள்ளும் அப்படி அந்த நரம்புகள் விழித்துக் கொள்ளும்போது நமக்கு மீண்டும் மூட்டு வலி ஏற்படும். மீண்டும் பெயின் கில்லர் மாத்திரையை நாம் பயன்படுத்த வேண்டும்.
இதையும் படியுங்கள் : BP (உயர் இரத்த அழுத்தம்) என்றால் என்ன? குணப்படுத்துவது எப்படி?
இப்படி வலி ஏற்படும் போதெல்லாம் வலி மாத்திரைகளை பயன்படுத்தி மூட்டு வலியை உணர்த்தக்கூடிய நரம்புகளை தொடர்ந்து செயலிழக்க செய்தால் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும்.
வலி மாத்திரையில் உள்ள ரசாயனங்களை உடலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் போது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உட்பட உள்ளுறுப்புகள் வலி மாத்திரையின் பக்க விளைவால் பாதிக்கப்படுகிறது. வலி மாத்திரை பயன்படுத்தினால் தற்சமயம் மூட்டு வலி குறையுமே தவிர உங்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கப் போவதில்லை. அதே போல உள்ளுறுப்புக்களும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் இது சரியான வழிமுறை கிடையாது. இது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்தான ஒரு முறையாகும்.
மூட்டு வலி ஏன் ஏற்படுகிறது?
மூட்டு வலி ஏன் ஏற்படுகிறது? அதற்கான மூல காரணம் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் உடலில் உள்ள மூட்டுக்கள் அனைத்தையும் பராமரிக்கக் கூடியது மனித உடலில் இருக்கக்கூடிய நீர் சக்தியின் பணியாகும்.
எனவே மூட்டு வலி ஏற்பட்டால் அதற்கு மனித உடலில் இருக்கக்கூடிய நீர் சக்தியின் சமநிலைக்குலைவு தான் காரணம்.
இதையும் படியுங்கள்: தொப்பையை குறைக்க சரியான தீர்வு என்ன? (Belly fat loss)
மாத்திரை இல்லாமல் மூட்டு வலியை குணப்படுத்துவது எப்படி?
நீர் சக்தியின் இயக்கத்தை சமநிலைப்படுத்தும் பொழுது மூட்டுக்கள் பலமடைந்து மூட்டு வலியில் இருந்து நாம் முழுமையாக விடுபட முடியும்.
அக்குபஞ்சர் மருத்துவத்தில் மூட்டு வலி நோயாளிக்கு நீர் சக்தியை சமப்படுத்தும் சிகிச்சையே மேற்கொள்ளப்படுகிறது.
நீர் சக்தி மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதா? அல்லது நீர் சக்தியை பராமரிக்கக் கூடிய உடலில் இருக்கக்கூடிய மற்ற மூலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை நாடிப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் எந்த ஒரு மருந்து மாத்திரைகளும் இல்லாமல் நீர் சக்தி படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்து சமநிலை அடையும் பொழுது அந்த மனித உடல் ஆரோக்கிய நிலை அடைகிறது.
ஒரு மனிதன் எந்த அளவு தன் உடலை மனிதத் தவறின் காரணமாக சமநிலையைய் சீர்கெடுத்து வைத்துள்ளாரோ அதை வைத்து தான் அந்த உடல் நிலையை படிப்படியாக சமப்படுத்தி உடலில் உள்ள அனைத்து சக்தியையும் ஒருநிலைப்படுத்தும் பொழுது அந்த மனிதன் மிக விரைவாக ஆரோக்கிய நிலை அடைந்து மூட்டுவலி மட்டுமில்லாமல் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட முடியும்.
- அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்
Tags
health