சிக்ஸ் பேக் தோற்றம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள், பானை வயிறு தொப்பை கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.
இந்த இரு வேறு தோற்றத்திற்கு காரணம் என்ன என்று நாம் சிந்தித்தோமா?
இதையும் படியுங்கள் : மைதா உணவுகளை சாப்பிடலாமா?
{getToc} $title={Table of Contents}
தொப்பைக்கு மனிதனின் புரிதல் குறைபாடு காரணமா?
கண்டிப்பாக மனிதனின் புரிதல் குறைபாடு தான் தொப்பைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
மனிதனின் புரிதல் குறைபாட்டை வியாபாரிகள் கண்டுபிடித்து மிகத் தந்திரமாக அதனை லாப நோக்கத்தோடு கையாண்டு, அதன் மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்கிறார்கள்.
ஒரு பக்கம் உடல் எடையை ஏற்றுவதற்கு பல வகையான ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், ரசாயன உணவுகள், இரவு நேர விருந்துகள், பானிபூரி, சமோசா, டீ, வடை, முறுக்கு, மிச்சர், கேக், பன், சாக்லேட் போன்ற நொறுக்கு தீனி உணவுகளை நம் கண்முன்னே காண்பித்து, நம் ஆசையை தூண்டி உடல் எடையை பெருக்க செய்கிறார்கள். கொழுப்பை உடலில் சேகரிக்க செய்கிறார்கள். இவை அனைத்தும் மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் தான். இதில் பைபர் என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து என்பது ஜீரோ சதவீதத்தில் தான் இருக்கும்.
இதையும் படியுங்கள் : கீரை உணவுகளை இரவு சாப்பிடலாமா? கூடாதா?
மாவு சத்து உணவுகளை அதிகமாக உட்கொண்டால் என்ன?
ஆக்சிஜனை உடலில் சேமித்து வைப்பதற்கு எப்படி வழி இல்லையோ அதேபோல மனித உடலில் கார்போஹைட்ரேட் என்று சொல்லக்கூடிய மாவுச்சத்துக்களை மாவு சத்தாகவே சேமித்து வைப்பதற்கான எந்த ஒரு முகாந்திரமும் உடலில் இல்லை.
ஆனாலும் நாம் உண்ணக்கூடிய உணவுகள் தரமான உணவாக மிகச் சரியாக செரிமானம் செய்யப்பட்ட உணவாக கார்போஹைட்ரேட் என்று சொல்லக்கூடிய மாவுச்சத்து உணவுகள் இருந்தால் அந்த உணவுகளை மனித உடல் கிளைக்கோஜனாக மாற்றி தசைநார்கள் கல்லீரல் போன்ற இடங்களில் சேமித்து வைக்கிறது.
ஆனால் நாம் உண்ணக்கூடிய தரமற்ற தேவையற்ற மாவு சத்துக்களை தேவைக்கு மீறி உண்ணுவதால் அப்படி உண்ணக்கூடிய மாவுச்சத்து உணவுகள் அனைத்தும் மனித உடலால் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படுகிறது.
நம் உடலில் தேவைக்கு மீறி உண்ணக்கூடிய மாவுச்சத்து உணவுகள் அனைத்தும் கொழுப்பாக மாறி ஒரு பக்கம் உடல் பருமன் ஏற்படுகிறது.
அதேபோல மறுபக்கம் உடலை எடையை குறைப்பதற்கு Fat loss drinks, தொப்பையை குறைப்பதற்கு வயிற்றில் கட்டக்கூடிய மிஷின், உடற்பயிற்சி மிஷின், நடை பயிற்சி மெஷின், வயிற்றில் தடவும் ஜெல், சைக்லிங் என்று உடலை குறைப்பதற்கு பல வகையான வியாபார தந்திரங்கள் நடக்கிறது. இவை இரண்டிற்கும் மத்தியில் தான் உண்மை இருக்கிறது என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் எடை கூடியவர்கள் குறைப்பதற்கும் குறைந்தவர்கள் கூட்டுவதற்கும் புரிதலின்மையின் காரணமாக விடையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள் : ஜங்க் புட்(JUNK FOOD) உணவுகளை ஏன் சாப்பிடக்கூடாது ?
நம் முன்னோர்கள் மாவுசத்து உணவை உண்ணவில்லையா?
முன்னோர்கள் இதே மாவுச்சத்து உணவுகளை உட்கொண்டு தானே ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
நம் முன்னோர்களால் உண்ணப்பட்ட உணவுகளில் மாவுச்சத்துகள் இருந்தாலும் அதில் நார்ச்சத்தும் இருக்கும் ஆனால் இன்று நாம் சாப்பிடக்கூடிய பேக்கரி உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் நொறுக்கு தீனி உணவுகளில் நார்ச்சத்து கிடையாது.
நம் முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ விழா நாட்களில் உண்ணுவார்கள். ஆனால் நாம் இன்று தினம்தோறும் Refined carbs என்ற இதே போன்ற உணவுகளை தான் தொடர்ந்து உட்கொள்கிறோம். அதனால் தான் நம் உடலில் கொழுப்புகளின் தேக்கம் அதிகமாக ஏற்படுகிறது.
தொப்பையை குறைக்க தீர்வு என்ன?
தொப்பையை குறைப்பதற்கு ஒரே ஒரு நிரந்தர தீர்வு தான் உள்ளது என்னவென்றால் தேவையற்ற அளவில் உள்ள மாவுச்சத்து உணவான பேக்கரி உணவுகள் மைதா உணவுகள் நொறுக்கி தீனி உணவுகளை உண்ணுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஏனென்றால் இது போன்ற நொறுக்கு தீனி உணவுகளில் புரோட்டின் என்ற புரதச் சத்தோ அல்லது பைபர் என்ற நார்ச்சத்தோ மிகக் குறைந்த அளவில் இருக்கிறது.
தொப்பையை குறைக்க என்ன சாப்பிடலாம்?
மனித உடலின் தசைகளை வலுப்படுத்த மிக முக்கியமான உணவாக இருப்பது புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் ஆகையால் நாம் உண்ணக்கூடிய உணவில் கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து உணவுகளை குறைத்து புரோட்டின் உணவுகளை அதிகப்படியாக சேர்த்துக் கொண்டு உண்ண வேண்டும் அப்போதுதான் தேவையில்லாத கொழுப்புகள் உடலில் இருந்து வெளியேறும்.
அப்படி தேவையில்லாத கொழுப்புகள் உடலில் இருந்து வெளியேறும் போது தொப்பை என்பது இயல்பாக குறையும் இந்த எளிமையான வழிமுறையை புரிந்து கொள்ள மனிதர்கள் முயற்சி செய்தால் இது போன்ற வியாபார தந்திரத்தின் மூலம் நடக்கக்கூடிய மோசடியில் இருந்து தற்காத்துக் கொண்டு தொப்பையை குறைத்து வலுவான உடலமைப்பையும் கம்பீரமான தோற்றத்தை பெற முடியும்.
உணவை உண்ணும் முன் அல்லது உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் இதில் சத்துக்கள் உள்ளதா என்பதை ஒரு நிமிடம் உணவின் மீது கவனம் செலுத்தி சிந்தித்துப் பாருங்கள் விடை உங்களுக்கே புரியும்.
- அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்.
இதையும் படியுங்கள் : ஜங்க் புட்(JUNK FOOD) உணவுகளை ஏன் சாப்பிடக்கூடாது ?