- ஜங்க் ஃபுட் என்றால் குப்பை உணவுகள் என்று அர்த்தம்.
- நாம் உண்ணக்கூடிய உணவுகளை ஏன் குப்பை உணவுகள் என்று நாம் அழைக்கிறோம் ?
- அதற்கு முன்பாக நாம் ஏன் உணவு உண்ணுகிறோம், என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நாம் எதற்காக உணவு உண்ணுகிறோம்?
இந்த மனித உடலின் ஆற்றல் தேவைக்காக தான் உணவு உண்ணுகிறோம். நாம் உண்ணக்கூடிய உணவை நம் உடல் செரிமானம் செய்து அதில் உள்ள சத்துக்களை பிரித்து எஞ்சியுள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டும். அப்படி நாம் உண்ணக்கூடிய உணவுகளை செரிமானம் செய்வதற்கு நம் உடலுக்கு ஆற்றல் செலவாகும் அல்லவா ?
- உதாரணமாக, காலை நாம் நான்கு இட்லி உண்ணுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
- நாம் சாப்பிட்ட இந்த இட்லியை செரிமானம் செய்வதற்கு உடலில் இருந்து 100 ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்.
- 100 ரூபாய் மதிப்புள்ள ஆற்றலை செலவு செய்து நாம் சாப்பிட்ட நான்கு இட்லியை நம்முடைய உடல் செரிமானம் செய்து விட்டது.
- இப்போது செரிமானம் செய்யப்பட்ட இட்லியில் இருந்து 150 ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் நமக்கு சத்தமாக கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.
- அப்படி என்றால் நமக்கு ஐம்பது ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் லாபம் என்று அர்த்தம்.
அதேபோல ஜங்க் ஃபுட் என்று சொல்லக்கூடிய நொறுக்கு தீனி உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகப்படியான ரசாயனம் கலந்த உணவுகளை உட்கொண்டால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
உதாரணமாக, மூன்று பரோட்டாவை நாம் இரவு உணவாக உண்ணுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
நாம் சாப்பிட்ட இந்த மூன்று பரோட்டாவை நம் உடல் செரிமானம் செய்வதற்கு 100 ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் செலவு செய்யப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் செரிமானம் செய்யப்பட்ட புரோட்டாவில் இருந்து நம் உடலுக்கு கிடைத்த சத்துக்கள் நம் உடலால் செலவு செய்யப்பட்ட ஆற்றலை விட கூடுதலாக கிடைக்குமா என்றால் கண்டிப்பாக கிடைக்காது. மாறாக அந்த பரோட்டாவில் இருந்து 40 ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் தான் சத்தமாக கிடைத்திருக்கும். அப்படி என்றால் நம் உடலில் இருந்து 60 ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் நஷ்டம் என்று அர்த்தம்.
இதையும் படியுங்கள்: கண்ணாடி அணிவதால் கண் பார்வை குறைபாடு சரியாகுமா?
பரோட்டாவில் ரசாயன கலப்புகள் அதிகமாக இருப்பதால் அந்த பரோட்டாவை செரிமானம் செய்வதற்கு உடலில் இருந்து ஆற்றல் அதிகமாக செலவு செய்யப்படும். ஆனால் பரோட்டாவிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் நாம் உடலில் இருந்து செலவு செய்யப்பட்ட ஆற்றலை விட மிக குறைவாக இருக்கும்.
அப்படி நாம் சாப்பிட்ட உணவுகள் உடலில் இருந்து செலவு செய்யப்பட்ட ஆற்றலை விட மிகக் குறைவாக இருந்தால், அவைகள் தான் ஜங்க் ஃபுட். அதாவது குப்பை உணவுகள் என்று கூறப்படுகிறது.
பரோட்டா மட்டுமல்ல இது போன்று பல வகையான மைதாவால் செய்யப்பட்ட பேக்கரி உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், ரசாயன கலப்பு அதிகம் உள்ள உணவுகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் போன்ற பல உணவுகள் உடலில் இருந்து செரிமானம் செய்யப்பட்ட ஆற்றலை விட மிகக் குறைந்த அளவு ஆற்றல் தான் உடலுக்கு கிடைக்கிறது. இது போன்ற உணவுகள் தான் குப்பை உணவுகள் என்ற பட்டியலில் இடம்பெறுகிறது.
ஜங்க் ஃபுட் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், நம் உடலால் அந்த உணவுகளை முழுமையாக செரிக்க முடியாமல் உடல் உள்ளுறுப்புக்கள் திணறுகிறது. அரைகுறையாக செரிக்கப்பட்ட உணவுகள் பெருங்குடலில் இருந்து முழுமையாக வெளியேற முடியாமல் பெருங்குடலில் கழிவாக தேக்கமடைகிறது. இப்படி தேக்கமடைந்த நாள்பட்ட கழிவுகளால் தான் உடலில் பலவித பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தலைவலி, சளி, காய்ச்சல், அரிப்பு போன்ற இன்னும் ஏராளமான பிரச்சனைகள் இந்த கழிவு தேக்கத்தின் விளைவால் தான் ஏற்படுகிறது. எனவே இது போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதே வேளையில் சத்தான பழங்களையோ அல்லது நட்ஸ் வகைகளையோ முலை கட்டிய பயிறு வகைகளையோ காலை உணவாக அல்லது இரவு உணவாக உட்கொண்டால் அந்த உணவுகளை நம் உடல் செரிமானம் செய்வதற்கு சுமாராக 30 ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் தான் நம் உடலில் இருந்து செலவு செய்யப்படுகிறதென்றால் சாப்பிட்ட அந்த உணவுகளில் இருந்து நம் உடலுக்கு கிடைக்க கூடிய ஆற்றல் என்பது 150 ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் கிடைக்கலாம். இந்த உணவுகளை தான் Healthy food என்கிறோம்.
ஆகையால் ஜங்க் ஃபுட் என்ற குப்பை உணவுகளை தவிர்த்து விட்டு ஹெல்தி ஃபுட் என்று சொல்லக்கூடிய சத்தான உணவுகளை வீட்டில் சமைத்த மாமிச உணவுகள் அனைத்து வகையான கீரை மற்றும் காய்கறி உணவுகளை நாவிற்கு பிடித்த சத்தான உணவுகளை தேடி தேடி உண்ணுங்கள்.
ஏனென்றால் நீங்கள் இன்று சாப்பிடக்கூடிய உணவு நாளை உங்கள் உடலில் ஒரு அங்கமாக மாறப்போகிறது என்பதை மறவாதீர்கள்.
சிறுபிள்ளையாக இருந்த நீங்கள் எப்படி இவ்வளவு பெரிய மனிதனாக வளர்ந்தீர்கள். அதற்கு நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்கள் தான் மூல காரணம் என்றால் அந்த உணவுகள் எந்த அளவு சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்க வேண்டும்.
மிக முக்கியமாக செய்தி என்னவென்றால் சத்துக்கள் நிறைந்த உணவை தேடி தேடி சாப்பிட்டாலும் அந்த உணவில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் இந்த மனித உடல் தனக்கு எப்போது ஆற்றல் தேவை ஏற்படுகிறதோ அப்போது பசி என்று உணர்வை இந்த மனித உடல் ஏற்படுத்தும் அதன் பிறகு தான் உணவு உண்ண வேண்டும். [பசித்துப் புசி] அப்போதுதான் அந்த உணவில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலுக்கு முழுமையான கிடைக்கும்.
தொடர்ந்து கார்போஹைட்ரேட் அதாவது மாவுச்சத்து உணவுகளை மட்டும் உண்ணாமல் புரோட்டின், பைபர், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்கள் நாவிற்கு பிடித்திருந்தால் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். மாமிச உணவுகளில் அதிகப்படியான புரோட்டின் சத்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ஹெர்னியாவிற்கு(hernia) ஆப்ரேஷன் தேவையா?
காய்கறிகள்
அதேபோல அனைத்து வகையான காய்கறிகள், கீரை வகை உணவுகளில் இரும்பு சத்து, புரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே உணவில் உள்ள சத்துக்களில் கவனம் செலுத்தி ரசாயன கலப்பு மிகக் குறைவாக உள்ள பிடித்த உணவை உண்ணுங்கள். முக்கியமாக உங்கள் வயிற்றை முழுமையாக நிரப்பாமல் அரை வயிறு உண்ணுங்கள்.
மனதை கட்டுப்படுத்த முடியாமல் ஜங்க் ஃபுட் என்று சொல்லக்கூடிய குப்பை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் எப்போதாவது மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு வெளியில் செல்லும் பொழுதோ ஏதேனும் விசேஷ நாட்களிலோ உண்ணுங்கள் தினசரி உணவிலிருந்து கண்டிப்பாக ஜங்க் ஃபுட் என்ற குப்பைகளை தவிர்த்து விடுங்கள்.
தினசரி உண்ணக்கூடிய உணவுகளில் இந்த ஜங்க் ஃபுட் உணவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு செயலை தவறு என்று தெரிந்தும் யார் அதை செய்கிறாரோ அவரை நோய்கள் சூழ்ந்து கொள்ளும் அவருக்கு எந்த மருத்துவமும் பலன் அளிக்காது.
அந்த தவறை செய்யாமல் யார் தன் மனதை முழுமையாக கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே வெற்றி அடைவார்கள். உதாரணமாக விளையாட்டு வீரர்களின் உடலை பாருங்கள் கட்டுக்கோப்பான உடல் அமைப்பும் வலிமையான உடலமைப்புமாக இருக்கும்.
இதையும் படியுங்கள்: குளிர்பானங்கள் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
வலிமையான உடலமைப்பிற்கு காரணம் என்ன என்பதை சிந்தித்தீர்களா?
உலகில் நம் மனதை சீர்குலைக்க கூடிய நம்மை வழிகெடுக்கக்கூடிய பல வகையான ரசாயன உணவுகள் நம்மை சுற்றி இருந்தாலும் விளையாட்டு வீரர்கள் தன்னுடைய உடலின் மீது அக்கறை கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி தன்மையோடு மனதை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி அடைகிறார்கள் என்பதை நாம் நேரடியாக பார்த்து உணர்ந்தாலும் நம் உணர்வால் அதை உணர முடியாமல் இருக்கிறோம். உணவு உண்ணும் முறையில் ஒழுக்கம் இருந்தால் வாழ்க்கையில் முழுமையான வெற்றியை பெற முடியும் என்பதை மறவாதீர்கள்.