ஆனால், மனிதன் இதை அறிந்தும் தன் உணர்வால் அதை உணர முடியாத நிலையில், உலக வாழ்க்கையின் மோகத்தால் தன் உணர்வை இழந்து அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
பணத்திற்காகவும் மனோஇச்சைக்காகவும் விலை மதிப்பற்ற தூக்கத்தை துறந்து, அதனால் ஏற்படும் விளைவுகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இரவு தூக்கத்தை வீணடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம் தூக்கத்தை இழந்தால் பலவித இன்னல்களை சந்திக்க நேரிடும்.
நாம் ஏன் இரவு தூங்க வேண்டும்?
மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகள் மூன்று உள்ளது.
- உணவு
- காற்று
- நீர்
ஆனால் மனிதன் ஆரோக்கியமாகவும் உயிரோடும் வாழ்வதற்கு நான்காவது முக்கியமான தேவை என்பது இரவு தூக்கம் தான். ஒரு மனிதன் இரவு தூக்கத்தை வீணடித்தால் அதனால் அவனுடைய உடலில் பலவித ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலின் அடிப்படை தன்மை பாதிக்கப்படும்.
மனித உடலில் பலவகையான ஹார்மோன்கள் சுரக்கிறது அந்த ஹார்மோன்கள் என்பது ஒன்று மற்றொன்றை சார்ந்து இருக்கும். அதாவது ஒரு ஹார்மோன் சுரந்ததால் தான் மற்றொரு ஹார்மோன் சுரக்கும்.
அதேபோல நாம் தூங்கும் பொழுதும் சில ஹார்மோன்கள் சுரக்கிறது அப்படி தூக்கத்தில் சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சுரக்கவில்லை என்றால் அதனை சார்ந்துள்ள மற்ற ஹார்மோன்களும் சுரப்பதில்லை இதனால் உடலில் பலவித ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடல் பாதிக்கப்படுகிறது. பல நோய்களுக்கு இது முக்கியமான காரணமாகவும் இருக்கிறது.
மனிதனுடைய முன் நெற்றியில் இருக்கக்கூடிய பீனியல் கிளாண்ட் [pineal gland] லிருந்து மெலடோனின் [Melatonin] என்ற ஹார்மோன் இரவு 11 மணிக்கு நாம் இருட்டில் ஆழ்ந்து உறங்கும் போது மட்டுமே சுரக்கும். இது இயற்கையின் படைப்பு.
இந்த ஹார்மோனின் சுரப்பை எதிர்பார்த்து வேறு சில ஹார்மோன்களும் காத்துக் கொண்டிருக்கும். மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கவில்லை என்றால் மற்ற ஹார்மோன்களும் சுரப்பதில்லை!
ஆகையால் இரவு தூக்கம் என்பது ஹார்மோன்களின் சுழற்சி மாற்றத்தையே மாற்றி அமைக்கக்கூடிய முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு தூக்கத்தை வீணடித்தால் உடலில் ஹார்மோன் சுழற்சியில் கடுமையான மாற்றம் ஏற்பட்டு உடலில் வேறு வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே நாம் இரவு தூங்கினால் மட்டுமே ஹார்மோன்களின் சுழற்சி முறை இயல்பாக இருக்கும்.
மனிதன் எந்த வகையான உயிரினம்?
உயிரினங்களில் இரண்டு வகையாக இயற்கையால் படைக்கப்பட்டிருக்கிறது.
ஒன்று இரவு கண் விழித்திருக்கும் உயிரினங்கள் மற்றொன்று இரவு உறங்கக்கூடிய உயிரினங்கள்.
நாய், பூனை, ஆந்தை போன்ற உயிரினங்களின் கண்களை கவனித்து பாருங்கள் இரவு நேரத்தில் லைட் வெளிச்சம் பட்டால் கண்கள் ரெப்லெக்ட்(reflect) ஆகும்.
ஏனென்றால் அந்த உயிரினங்களின் விழித்திரையில் இரண்டு லேயர் இருக்கும் இவைகள் இரவு கண் விழித்திருக்க கூடிய உயிரினங்களாக இயற்கையால் படைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மனிதனின் கண்கள் என்பது லைட் வெளிச்சம் பட்டால் ரிப்லேக்ட்(reflect) ஆகாது. மாறாக கண்கள் கூசும் நிலையில் தான் இருக்கும். ஏனென்றால் மனிதனின் விழித்திரையில் ஒரு லேயர் மட்டுமே இருக்கும்.
எனவே மனிதன் இரவு உறங்கக்கூடிய உயிரினமாக இயற்கையால் படைக்கப்பட்டிருக்கிறான்.
ஆகையால் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது கண்டுபிடிப்புகள் வளர்ந்து விட்டது லைட் வந்துவிட்டது என்று இறுமாப்பில் வாழாமல் இயற்கையின் வழியில் வாழுங்கள்.
சூரியன் மறைந்த உடனே மனிதனின் தூங்கும் நேரமும் துவங்கி விடுகிறது எனவே விரைவாக நமது கடமைகளை ஆற்றி விட்டு ஒரு மனிதனால் எவ்வளவு விரைவாக தூங்க செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக தூங்குவது தான் அவன் ஆரோக்கிய வாழ்வின் வழியாக இருக்கும் .
இரவு கண் விழிப்பதால் பாதிக்கக்கூடிய உள்ளுறுப்பு எது?
மனித உடலை பராமரிக்கக் கூடிய இயக்கக்கூடிய உள் உறுப்புக்கள் மொத்தம் 12 உறுப்புகள் உள்ளது இதில் மனித உடலில் உள்ள விஷத்தன்மையை முறிக்கக்கூடிய மற்றும் நாம் உண்ணக்கூடிய உணவில் உள்ள ரசாயனங்களில் இருந்து உடலை பாதுகாக்க கூடிய முக்கிய உறுப்பு கல்லீரல் என்ற ராஜ உறுப்பு தான்.
நாம் இரவு தூக்கத்தை வீணடிப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் என்ற ராஜ உறுப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. கல்லீரல் செயல்பாட்டு திறன் குறைந்தால் உடலின் ஆயுளும் குறைய ஆரம்பிக்கும்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் மற்றும் அதன் துணை உறுப்பான பித்தப்பை என்ற உறுப்புகள் இரவு மனிதன் ஆழ்ந்து உறங்கும் போது மட்டுமே இரவு 11 முதல் 3 மணி வரை தன்னைத்தானே ரீசார்ஜ் செய்து கொள்ளும். அதனால் தான் மனிதன் இரவு கண்டிப்பாக உறங்க வேண்டும் என்று இயற்கையால் கட்டளையிடப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது இருக்கக்கூடிய நவீன உலகத்தில் கலாச்சாரங்களில் ஏற்படக்கூடிய மாற்றத்தினால் தான் பல பிரச்சனைகள் உருவாகிறது. அதை மனித மனம் ஏற்றுக் கொண்டாலும் மனித உணர்வால் உணர முடிவதில்லை அதாவது இரவு 12 மணிக்கு இரவு விருந்து, கேளிக்கைகள், சினிமாக்கள் என்று குதூகலமாக இரவு முழுவதும் உறங்காமல் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தையே கையில் அடக்கி வைத்திருக்க கூடிய செல் போனை இரவு முழுவதுமாக பயன்படுத்திவிட்டு அதிகாலை 4 மணிக்கு தூங்க செல்வது என்று மனிதனுடைய மொத்த அடிப்படையும் தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. இவைகள் அனைத்தும் நம்மை சீர்கேடுக்கு மட்டுமே அழைத்துச் செல்லும் நாம் இவைகளை மகிழ்ச்சி என்று எண்ணிக்கொண்டு காலமாற்றத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இது மிகவும் ஆபத்தானது.
இரவு யார் அதிக நேரம் கண்விழித்திருந்து இரவு நேரத்தை வீணாக பொழுது போக்குகிறார்களோ அவருடைய உடலில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டு மறுநாள் வேலைகள் அனைத்தும் பாதிக்கப்படும். ஆனால் மனிதனால் அதை தன் உணர்வால் உணர முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவர்கள் கண்களை கவனித்து பார்த்தால் கண்கள் சிவந்து இருக்கும் ஏனென்றால் இரவு கண் விழித்திருந்தால் கல்லீரல் தன்னைத்தானே ரீசார்ஜ் செய்யவில்லை என்பதை உணர முடியும்.
மது அருந்தக் கூடியவர்கள் இரவு நேரத்தில் மதுவை அருந்திவிட்டு அவர்கள் மது போதையில் மயங்கி விடுவார்கள். ஆனால் விடிய விடிய அவர்களுடைய கல்லீரல் என்பது உறங்காமல் அவர் அருந்திய மதுவில் இருக்கக்கூடிய ஆல்கஹால் என்ற அந்த கெமிக்கலை கல்லீரல் பிரித்து வெளியேற்றிக் கொண்டிருக்கும்
அப்படி என்றால் இரவு கல்லீரல் அதனுடைய கழிவு நீக்கும் நேரத்தில் கூட கழிவுகளை சுத்தப்படுத்த முடியாமல் மனிதன் செய்த தவறால் ஆல்கஹாலை பிரிக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறது. எப்பொழுது கல்லீரல் ஆல்கஹாலை உடலில் இருந்து பிரித்து முடிகிறதோ அப்பொழுது அந்த மனிதருக்கு போதை தெளிந்து விடும்.
மனிதன் போதையில் மயங்கினாலும் விடிய விடிய கல்லீரல் உறங்காததால் காலையில் மது அருந்தியவரின் கண்கள் சிவந்து இருக்கும்.
நாம் உண்ணக்கூடிய உணவில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் மருந்து மாத்திரைகளில் உள்ள ரசாயனங்களையும் உடலில் இருந்து பிரித்து வெளியேற்றக் கூடிய ஆற்றல் கல்லீரல் என்ற ராஜ உறுப்புக்கு தான் உள்ளது. ஆகையால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ராஜ உறுப்புபை நாம் பராமரிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக, கல்லீரல் தன்னை தானே சுத்தப்படுத்தக்கூடிய நேரத்தில் நாம் உறங்க வேண்டும் நாம் உறங்கும்போது மட்டுமே கல்லீரலும் பித்தப்பையும் தன்னைத்தானே ரீசார்ஜ் செய்து கொள்ளும்.
முடி கொட்டுவதை தவிர்க்க: https://www.uyiratral.com/2023/08/hairloss.html
இரவு கண்விழிப்பதால் ஏற்படும் மற்றொரு ஆபத்து என்ன?
குழந்தை இல்லையா? கவலை வேண்டாம் நாங்கள் குழந்தையை உருவாக்கி தருகிறோம், என்று கூறி இன்று மூலைக்கு மூலை கருத்தரிப்பு மையம் [fertility center] திறக்கப்பட்டு இருப்பதற்கு மிக முக்கிய காரணம் இரவு கண் விழித்திருப்பது தான்.
ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கருமுட்டையும் எடுத்து தனியாக ஒரு உபகரத்தில் வைத்து இரண்டையும் ஒன்று சேர்த்து அதை பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்தி குழந்தையை 10 மாதம் வளர்க்க செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள் இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இயற்கையாக பிறக்க வேண்டிய ஒரு குழந்தையை மனித உடல் உருவாக்கக்கூடிய ஒரு குழந்தையை இப்படி நவீன மிஷின்கள் உருவாக்கி தருகிறதே இது சரியான வழிமுறையா ?
இரவு கண் விழித்தால் குழந்தையின்மை என்ற பிரச்சனை ஏற்படுமா?
இந்த நிலைமைகெல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது இரவு தூக்கத்தை கேலிக்கூத்தாக ஆக்கி இரவு நேரத்தை பொழுதுபோக்காக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நவீன கலாச்சாரத்தில் இருந்து தான் துவங்குகிறது என்பதை மறந்து விட வேண்டாம்.
மேலே சொல்லப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம் இரவு தூக்கத்தை பணத்திற்காகவும் கேளிக்கைக்காகவும் வீணாக்குவது தான் என்பதை மனிதனால் புரிந்து கொள்ள முடிந்தாலும் உணர்வால் உணர்ந்து கொள்ள முடியாமல் இருப்பது தான் உண்மை.
ஆகையால் இயற்கையான இரவு தூக்கத்தை இரவு நேரத்தில் ஆழ்ந்து உறங்க வேண்டும் என்று உணருங்கள்... உறங்குங்கள்....
இயற்கையான வாழ்க்கையில் ஆரோக்கியத்தோடு வாழுங்கள்...
- ச. சையத் அஜ்மல்
for more blogs: https://www.uyiratral.com/
ஹெர்னியா விற்கு ஆபரேஷன் தேவையா?
hernia: https://www.uyiratral.com/2023/02/hernia.html