uyiratral |
- மோஷன் சிக்னெஸ் [motion sickness]
- நம்முடைய மனப்பதிவு
மோஷன் சிக்னெஸ் என்றால் என்ன?
இது போன்று மூன்று பகுதிகளில் இருந்து வேறு வேறு சிக்னல்கள் மூளைக்கு கிடைப்பதால் மூளை என்பது குழப்பம் அடைந்து மோஷன் சிக்னெஸ் என்ற நிலையை உடலில் ஏற்படுகிறது.
மனிதனுடைய காதுகளுக்கு சப்தங்களை கேட்கும் திறன் மட்டுமே உள்ளது என்று நினைப்பது தவறு ஏனென்றால் மனித உடலை ஒருநிலைப்படுத்துவதற்கு அதாவது பேலன்ஸ் பண்ணுவதற்கு காதுகளின் உள்ளே இருக்கக்கூடிய Semi circular disc என்ற வளையம் முக்கிய பங்காற்றுகிறது.
இந்த செமி சர்க்குலர் டிஸ்க் மூன்று வளையமாக 90 டிகிரி ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் அதன் உள்ளே எண்டோ லிப்த் என்ற திரவம் மூன்று வளையத்திலும் சம அளவில் இருக்கும்.
மனித உடல் எந்த எந்த திசையெல்லாம் சாய்கிறதோ அதற்கு ஏற்றார் போல எண்டோ லிப்த் என்ற திரவமும் சாய்ந்து மனிதனுடைய உடலை பேலன்ஸ் செய்ய உதவி செய்து கொண்டே இருக்கும். எப்படி என்றால் மனித உடல் எந்த திசையெல்லாம் திரும்புகிறதோ அதற்கு ஏற்றால் போல அந்த திரவமும் மாறி கொண்டே இருக்கும்.
இதை காதில் உட்புறமாக Semi Circular disk அருகில் இருக்கக்கூடிய ஓட்டோ லித் [Otolith] என்ற ஒரு ஆர்கன் கவனித்து மூளைக்கு தகவலை அனுப்பி கொண்டே இருக்கும். நம்முடைய மூளை உடலில் எந்த திசையில் பேலன்ஸ் குறைவாக இருக்கிறதோ அந்த திசைக்கான உறுப்புகளை பலப்படுத்த தகவல் அனுப்பும்.
உதாரணமாக நாம் மாடியில் இருந்து எட்டிப் பார்க்கும் பொழுது சாய்வது போன்று உணர்வு ஏற்பட்டால் அடுத்த நொடியே மற்றொரு கால் நம்மை பேலன்ஸ் ஆக தாங்கி பிடிக்கும் என்பதை நாம் கவனித்திருப்போம் அல்லவா! இவை அனைத்தும் இந்த காதுகளின் Semi circular disc உள்ளே இருக்கக்கூடிய என்டோ லிப்த் என்ற திரவம் தான் முக்கிய காரணமாகும்.
நாம் கார் அல்லது பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது நம்முடைய தலை அசைவதால் நம் காதுகளின் உள்ளே இருக்கக்கூடிய எண்டோ லிப்த் என்ற திரவமும் அசையும் இதனால் ஓட்டோ லித் என்ற ஆர்கன் நாம் பயணத்தில் இருக்கிறோம் என்ற தகவலை மூளைக்கு அனுப்பும்.
ஆனால் நம்முடைய தசைகள் அதிக அசைவு இல்லாமல் ஓய்வில் இருப்பதால் தசை பகுதியில் இருந்து நாம் ஓய்வில் இருக்கிறோம் என்ற தகவலை மூளைக்கு அனுப்பும்.
மற்றும் நம்முடைய கண்கள் கார் அல்லது பஸ்ஸின் உள்ளே அசையாமல் இருக்கக்கூடிய சில பொருட்களை பார்த்து வேறு தகவலை அனுப்பும் இதனால் நம்முடைய மூளை எந்த நிலையில் நம் உடல் இருக்கிறது என்பதை அறிய முடியாமல் குழப்பம் அடையும் இதனால்தான் நமக்கு மோஷன் சிக்னெஸ் என்ற நிலை ஏற்பட்டு வாந்தி ஏற்படுகிறது.
மனப்பதிவு என்றால் என்ன?
நாம் ஏதோ ஒரு சூழ்நிலையில் ரசாயன உணவுகளையோ அல்லது அதிகப்படியான உணவுகளையோ உட்கொண்டு விட்டு பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்த உணவுகள் செரிமானம் ஆகாமல் உணவுக் குழாயில் தேங்கியிருந்து பயணத்தின் போது நமது மூளை இப்பொழுது நம் உடல் ஓய்வா? அல்லது பயணமா? என்று அறிய முடியாமல் குழப்பத்தினால் மோஷன் சிக்னெஸ் என்ற நிலையை அடைந்திருப்பதால் ஏற்கனவே உணவு குழாயில் தங்கி இருந்த உணவுகள் வாந்தியாக வெளியேறும் அந்த நிகழ்வு என்பது நம்முடைய ஆழ் மனதில் பயணம் மேற்கொண்டால் வாந்தி ஏற்படும் என்ற அழுத்தமான ஒரு பதிவை ஏற்படுத்தி விடும்.
இதனால் நாம் எப்பொழுது பயணம் என்று நினைத்தாலும் உடனே நம் ஆழ்மனதில் உள்ள அந்த எண்ணம் நம்முடைய சிந்தனைக்கு வருவதால் நமக்கு வாந்தி என்ற உணர்வு ஏற்படும்.
மோசன் சிக்னெஸ் என்ற நிலைமை உடலில் ஏற்பட்டாலும் நமக்கு வாந்தியாக ஏற்பட காரணமாக இருப்பது நம் உடலில் ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுகளின் தேக்கம்தான் தானே தவிர வேறு இல்லை ஆகையால் நீங்கள் பயணத்தின் போது உணவு உட்கொள்ளாமல் சென்றாலும் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் ஏற்கனவே இருந்தால் மோஷன் சிக்னெஸ் மூலம் உங்களுக்கு வாந்தி ஏற்படும்.
பயணத்தின் போது வாந்தி வருவதை தடுப்பது எப்படி?
ஏற்கனவே உங்கள் ஆழ்மனதில் பதியப்பட்டுள்ள பதிவை அளிக்க வேண்டும். பஸ் பயணம் என்று நினைத்தவுடன் வாந்தி உணர்வு ஏற்பட்டால் நம்முடைய மனம் ஆழ்மனதிற்கு சென்று விட்டது என்பது நம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நமக்கு மீண்டும் அந்த வாந்தி மற்றும் பயணம் பற்றி சிந்தனை வந்து கொண்டே இருக்கும். அதனை கண்டுகொள்ளாமல் மற்ற விஷயங்களை மீண்டும் சிந்திக்கும் பொழுது பழைய பதிவுகள் அழிக்கப்பட்டு புதிய பதிவுகள் நம் ஆழ்மனதில் பதிவு செய்யப்படுகிறது.
நல்ல விஷயங்களை சிந்திக்கும் பொழுது புதிய பதிவுகளை ஆழ்மனம் பதிய ஆரம்பிக்கும். பழைய பதிவுகள் மனதில் இருந்து படிப்படியாக அழிய ஆரம்பிக்கும்.
அதேபோல பயணத்தின் போது மட்டுமல்ல எப்பொழுதும் பசி என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு உணவு உண்ண வேண்டும். உடலில் கழிவுகளின் தேக்கம் ஏற்படாமல் இருந்தால் மோஷன் சிக்னெஸ் என்ற பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுபட முடியும். வாந்தி என்ற பிரச்சனை எப்பொழுதும் ஏற்படாது.
- அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்
மேலும் படிக்க : https://www.uyiratral.com/