இரவு நேரத்தில் கீரை உணவுகளை உட்கொள்ள வேண்டாம், என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட ஒரு தகவல் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.{getToc} $title={Table of Contents}
நம் முன்னோர்கள் எந்த அடிப்படையில் கீரை உணவுகளை இரவு நேரத்தில் உட்கொள்ளக்கூடாது என்று சொன்னார்களோ அந்த அடிப்படை, இன்றைய காலத்திற்கு பொருந்தாத நிலையில் தான் இருக்கிறது.
கீரை உணவுகளை இரவு நேரத்தில் உட்கொண்டால் செரிமானம் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஞ்ஞான அடிப்படையில் அதற்கு எந்த ஒரு சான்றும் கிடையாது. இரவு நேரத்தில் கீரை உணவுகளை உட்கொண்டால் அதுவும் பசி ஏற்பட்டு பிறகு உட்கொண்டால் நமக்கு செரிமானத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அது இரவாக இருந்தாலும் அல்லது பகலாக இருந்தாலும் சரி!
அப்படி என்றால் நம் முன்னோர்கள் இரவு நேரத்தில் கீரை உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்று சொன்னதற்கு காரணம் என்ன?
நாம் வாழக்கூடிய இந்த நவீன உலகத்தில் நமக்கு கீரைகள் தேவைப்பட்டால் மார்க்கெட்டில் அல்லது கடைகளில் சென்று நமக்கு தேவையான கீரைகளை வாங்கிக் சமைத்து உண்ணுவோம்.
அது மட்டுமில்லாமல் இன்று கீரை நம் வீட்டிற்கே தேடி வருகிறது அல்லவா?
ஆனால் அந்தக் காலத்தில் கீரை உணவுகளை சமைக்க வேண்டும் என்றால் தோட்டத்திலோ அல்லது வீட்டிற்கு பின்புறமும் உள்ள இடத்திலோ கீரைகளை அப்பொழுதே பறித்து சமைத்து உண்பார்கள்.
அந்த காலத்தில் இரவு கீரைகளை உண்ணக்கூடாது என்று சொன்னதற்கு இரண்டு முக்கிய காரணம் உண்டு.
காரணம்-1
கீரைகளை இரவு நேரத்தில் பறித்தால் அப்பொழுது பாம்பு, பூரான், பூச்சிகள் போன்ற ஏதேனும் விஷ ஜந்துகள் நம்மை தாக்கக்கூடும் என்பதால் இரவு நேரத்தில் கீரை உணவுகளை உண்ண வேண்டாம் என்று முன்னோர்களால் கூறப்பட்டது. இதுதான் அதற்கான உண்மையான காரணம்.
காரணம் -2
இரவு நேரத்தில் நாம் கீரைகளை பறிக்கும் பொழுது வெளிச்சம் குறைவாக இருப்பதால் நாம் கீரைக்கு பதிலாக வேறு ஏதேனும் செடிகளை தெரியாமல் பிடுங்கி சமைத்து விடுவோம். அதனால் நமக்கு ஏதேனும் ஆபத்துக்கள் நேரிடலாம் என்ற ஒரு காரணத்தாலும் இரவு நேரத்தில் கீரை உணவுகளை சமைக்க வேண்டாம், உண்ண வேண்டாம் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டது. ஆனால் இன்று அப்படி கிடையாது. நம்மை தேடி வீட்டிற்கே கீரைகள் வருகிறது.
இரவு கீரைகளை பறித்தால் ஆபத்து ஏதேனும் நேரிடலாம் என்ற நோக்கத்தில் தான் இது சொல்லப்பட்டது. மற்றபடி கீரை உணவுகளை தாராளமாக உட்கொள்ளலாம்.
இரவு கீரை உணவுகளை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று ஒரு தவறான கருத்து உள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் திருமண விருந்து என்ற பெயரில் இரவு தான் அதிகப்படியான செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் உணவுகளையும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் இரவு உணவாக உட்கொள்கின்றனர். அதுதான் நம் செரிமான மண்டலத்தை பாதிக்கச் செய்து உடலில் கழிவுகள் தேங்குவதற்கு வழி செய்கிறது. இதைவிட எளிமையான கீரை உணவு சாப்பிடுவது என்பது ஆரோக்கியம் தான் அதில் எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.