மூட்டு வலியைக் [joint pain] குணப்படுத்துவது எப்படி ?

uyiratral ortho
uyiratral

{getToc} $title={Table of Contents}

இன்று பெரும்பிரச்சனையாக உள்ள வலி என்றால் அது மூட்டு வலி தான்.  இன்று மூட்டு வலி[joint pain] ஏற்பட்டால் மூட்டு வலி ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை கண்டுகொள்ளாமல், எந்தத் தவறால் மூட்டு வலி ஏற்பட்டதோ அந்த தவறையும் செய்து கொண்டே வலியை மட்டும் தடுத்து நிறுத்துவதற்கு பெயின் கில்லர் மருந்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாலும் மூட்டின் தன்மை மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டு அது அலோபதியின் மருத்துவ நிலைக்கு கொண்டு செல்கிறது.

அதுவே அலோபதி மருத்துவத்தின் மூட்டு வலிக்கான மருத்துவ பெயர்களை வாங்கித் தருகிறது.

பெரும்பாலான மனிதர்கள் மூட்டு வலி[joint pain] ஏற்பட்ட உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மூட்டு வலியை குறைப்பதற்கு பெயின் கில்லர் மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். 

உடனடியாக அந்த மூட்டு வலி [joint pain] என்பது குறைந்து குணமாகிவிட்டது போல் ஒரு தோற்றம் ஏற்படும். ஆனால் நீங்கள் பயன்படுத்திய அந்த மருந்துகள் உங்களுடைய மூட்டில் உள்ள அந்த பிரச்சனையை சரி செய்ததா ? என்றால் கண்டிப்பாக இல்லை!

அந்த மருந்துகள் மூட்டு வலியை உங்களுக்கு உணர்த்தக்கூடிய மூளையில் உள்ள நரம்புகளை தற்காலிகமாக செயல் இழக்க அதாவது மந்தத்தன்மையை ஏற்படுத்த செய்திருக்கிறது அவ்வளவுதான்!

இந்த மூட்டு வலி ஏன் ஏற்பட்டது?  அதை எப்படி சரி செய்வது? என்பது பற்றி எல்லாம் பொதுவாக யாரும் சிந்திப்பதில்லை! 

பிரச்சனைக்கான காரணத்தை விட்டுவிட்டு வலியை மட்டும் குறைத்துக் கொண்டிருந்தால் சிறிது காலத்திற்குப் பிறகு அந்த மூட்டின் தன்மை கடுமையாக பாதிக்கப்படும்.

சாதாரண நிலையில் உள்ள ஒரு மூட்டு வலியை தொடர்ந்து பெயின் கில்லர் மருந்துகளை கொடுத்து மிகப்பெரும் மூட்டு வலியாக நவீன மருத்துவங்களால் உருவாக்கப்படுகிறது. 

 கடைசியாக மூட்டு அறுவை சிகிச்சை செய்து மூட்டின் இயல்பு தன்மையை இன்னும் அதிகமாக சீர்குலைக்கப்படுகிறது.

ஒரு உண்மையை நீங்கள் எப்பொழுதும் மறவாதீர்கள்!

நீங்கள் எந்த வகையான அறுவை சிகிச்சை செய்தாலும் அது ஒரு பிரச்சனையின் முடிவு அல்ல...  அதுதான் தொடக்கம்!                   

உங்களால் இயல்பான மூட்டை திரும்ப பெற முடியாது. உங்களால் இயல்பாக நடக்கவும் முடியாது. 

இதையும் படிக்கவும் :  காய்ச்சல் ( fever) ஏற்படும் போது வாய் ஏன் கசப்பாக இருக்கிறது தெரியுமா? 

பெயின் கில்லர் மருந்துகள் ஆபத்தானதா?

பெயின் கில்லர் மருந்துகளை பயன்படுத்துவதால் தான் அந்த மருந்துகள் மற்றொரு நோயை உருவாக்குகிறது. அதாவது பெயின் கில்லர் மருந்துகள் தான் மற்ற மருந்துகளை விட சிறுநீரகத்தை அதிகமாக பாதிக்க செய்கிறது.

சிறுநீரக பாதிப்பிற்கு மிக முக்கியமான காரணம் பெயின் கில்லர் மருந்துகளை பயன்படுத்துவது தான். உடலின் ராஜ உறுப்பான சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் உடலின் அடிப்படை தன்மையே பாதிக்கப்படும்.

without medicine treatment
uyiratral

நோய்களின் மருத்துவ பெயர்கள் தான் பயத்தை உருவாக்குகிறதா?

மூட்டு வலியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் மூட்டு வலி[joint pain] என்றால் என்ன ? மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது? என்பது பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அதுமற்றுமின்றி மூட்டு வலிக்கான ஆங்கில மருத்துவத்தின் மருத்துவப் பெயர்களை பற்றியும் தெரிந்து கொள்வதும் அவசியம்!  இது போன்ற மருத்துவ பெயர்களை பார்த்து தான் மக்கள் அச்சம் அடைகிறார்கள்.

மூட்டு வலியில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமென்றால் மூட்டு வலிகளில் என்னென்ன வகை பெயர்கள் இருக்கிறது. அதனுடைய பெயரை வைத்து எப்படி  பயத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நவீன மருத்துவத்தில் பார்வையில் பல வகையான மூட்டு வலிகள் இருந்தாலும் முதன்மையாக மூன்று வகைகளை கூறலாம்.

1. ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ்   [Osteoarthritis]

2. ரொமட்டாய்டு ஆர்த்தரைடீஸ்  [Rheumatoid arthritis]

3. கௌட்டி ஆர்த்தரைடீஸ்  [Gouty arthritis]

இதில் ஆர்தோ என்றால் எலும்பு என்று பெயர் ஐட்டீஸ் என்றால் வலி என்று பெயர் இதை இரண்டையும் சேர்த்து ஆர்த்தரைடீஸ் என்று மருத்துவக் கலைச் சொல்லில் [Medical Terminology] அழைக்கின்றனர்.

Osteo - என்றால் இரண்டு மூட்டுகள் இணைவது என்று பொருள்.

Rheumatoid - என்றால் வீங்கிய எலும்புகள் என்று பொருள்.

இதே போன்றுதான் நவீன மருத்துவத்தில் உள்ள ஒவ்வொரு நோய்க்கும் மருத்துவக் கலைச்சொல்லின் [Medical Terminology] பெயரில் அழைக்கப்படுவதால் அந்த பெயரை கேட்கும் போது மக்கள் மத்தியில் ஒரு வகையான பீதியை ஏற்படுத்துகிறது.

நவீன மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு மூட்டு வலிக்கும் ஒவ்வொரு காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் [Osteoarthritis] மூட்டு வலி என்றால் என்ன?

கால் மூட்டுகளில் மேலே ஒரு மூட்டும் கீழே ஒரு மூட்டும் இருக்கும் அல்லவா!  அந்த இரண்டு மூட்டிற்கும் இடையே கார்டிலேச் [cartilage] என்ற சவ்வு இருக்கும் அந்த சவ்வுடன் சைனோவியல் ஃபலூயிட் [Synovial fluid] என்ற திரவம் இருக்கும். இந்த ஜவ்வும் திரவமும் இரண்டு மூட்டுக்கும் இடையில் வளவளப்பாக உள்ளதால் தான் நாம் கால்களை இயங்குவதற்கு எளிதாக உள்ளது.

இந்த சைனோவியல் ஃபலூயிட் [Synovial fluid ] குறைந்தால் மூட்டு வலி ஏற்பட துவங்கிவிடும்.

கார்டிலேச் [cartilage] என்ற சவ்வு எப்போது தேய்மானம் ஏற்பட்டு இரண்டு மூட்டுகளும் ஒன்றோடு ஒன்று உரசுகிறதோ அப்போதுதான் கடுமையான வலி ஏற்படும். இதைத்தான் நவீன மருத்துவர்கள் ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் [Osteoarthritis] என்று கூறுகிறார்கள்.

கார்டிலேச் [cartilage] என்ற சவ்வு தேய்த்ததை தான் மூட்டு எழும்பு தேய்த்து விட்டது என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிக்கவும் :  கண்ணாடி அணிவதால் கண் பார்வை குறைபாடு சரியாகுமா ?

ரொமட்டாய்டு ஆர்த்தரைட்டீஸ் (Rheumatoid arthritis) என்றால் என்ன?

நம் உடலில் பலவகையான இணைப்பு எலும்புகள் உள்ளன. அந்த இணைப்பு எலும்புகளின் செல்களை மனித உடலின் எதிர்பாற்றலே அழிக்கிறது. அதனால் அந்த எலும்புகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கை கால்களை மற்றும் விரல்களை நீட்ட முடியாமல் மடக்க முடியாமல் முடங்குகிறது.

இதுதான் ரொமட்டாய்டு ஆர்த்தரைடீஸ் என்று நவீன மருத்துவத்தின் மூலம் சொல்லப்படுகிறது. 

rheumatoid arthritis
uyiratral

மனிதனுடைய எதிர்பாற்றலே மனித உடலில் உள்ள செல்களை ஏன் அழிக்கிறது?  என்ற கேள்விக்கான பதில் நவீன மருத்துவத்தின் மூலம் இன்னும் முழுமையான கண்டுபிடிக்கப்படவில்லை. சில உணவு முறை காரணங்களை மட்டும் கூறுகின்றன.

இதைத்தான் நாமும் கூறுகிறோம். நாம் உண்ணக்கூடிய உணவில் இருந்து தான் உடலில் ஏற்படக்கூடிய அனைத்து நோய்களும் துவங்குகிறது. ஆகையால் உணவு முறையில் ஒழுக்கம் இருந்தால் மட்டுமே நோயிலிருந்து முழுமையாக மீள முடியும்.

கௌட்டி ஆர்த்தரைடீஸ் [Gouty arthritis] என்றால் என்ன?

மனித உடலில் உருவாகக்கூடிய யூரிக் ஆசிட், மனித தவறின் காரணமாக அதிகமாகும் பொழுது அந்த கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு போதுமான எதிர்பாற்றல் உடலில் பற்றாக்குறையாக இருப்பதால் அந்த கழிவுகள் இணைப்பு எலும்புகளில் சென்று சேர்கிறது.

கழிவாக வெளியேற வேண்டிய அந்த யூரிக் ஆசிட்  உடலின் பல பகுதியில் உள்ள இணைப்பு எலும்புகளில் சென்று சேர்வதால் அந்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அந்த எலும்புகள் பாதிக்கப்படுகிறது. இதுதான் கௌட்டி ஆர்த்தரைட்டீஸ் என்று நவீன மருத்துவத்தால் அழைக்கப்படுகிறது. 

நவீன மருத்துவத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள மூட்டு வலிகளுக்கு பலவிதமான பெயர்களை வைத்தாலும் கண்டிபாக பயம் கொள்ள தேவையில்லை இவைகள் அனைத்தும் மூட்டு வலி அவ்வளவுதான்.

அதே போல  சித்த மருத்துவத்தில் சொல்லக்கூடிய முடக்கு வாதம் என்பதும் மூட்டு வலி என்பதைத் தான் குறிக்கிறது.

மூட்டு வலிகள் [joint pain] ஏற்படுவதற்கு உண்மையான காரணம் என்ன?

மனிதத் தவறால் உடலில் உள்ள நீர்மச்சமநிலை பாதிக்கப்பட்டு மூட்டுகளில் அந்த பாதிப்பு வெளிப்படுகிறது. அதனால் தான் மூட்டு வலி ஏற்படுகிறது. 

மூட்டு வலியைக் குணமாக்க வேண்டும் என்றால் உடலின் நீர்மச்சமநிலையை அதாவது நீர் சக்தியின் குறைபாட்டை சரிசெய்ய வேண்டும்.

உடலில் உள்ள நீர் சக்தியை ஒழுங்குபடுத்தும் பொழுது மூட்டு வலி என்பது குணமாகிவிடும்.

நீர் சக்தி ஒழுங்கு பட வேண்டும் என்றால் வாழ்வியலில் நாம் அறியாமல் செய்யக்கூடிய தவறுகளை சரி செய்ய வேண்டும். மேலும் மருந்தில்லாத அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

uyiratral acupuncture clinic
uyiratral

வாழ்வியலில் நாம் அறியாமல் செய்யக்கூடிய தவறுகளில் மிக முக்கியமாக இரவு தூக்கத்தை வீணடிப்பதும்  பசி உணர்வை மறந்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தோணும்போதெல்லாம், உணவுகளை பார்க்கும் போதெல்லாம் சாப்பிடுவதால், உடலில் கழிவுகளின் தேக்கம் ஏற்பட்டு அந்த கழிவுகள் உடலின் நீர்மச்சமநிலையை பாதிக்க செய்கிறது.

மனித உடலில் இருக்கக்கூடிய நீர் சக்தியின் இயக்க குறைவால் மூட்டுகளில் உள்ள கார்டிலேச் [cartilage] என்ற ஜவ்வும் அதை சுற்றியுள்ள சைனோவியல் ஃபலூயிட் [Synovial fluid] என்ற திரவமும் வற்றி இரண்டு கால் மூட்டுகளும் ஒன்றோடு ஒன்று உரசும்போது  வலி ஏற்படுகிறது.

அந்த வலி என்பது நீர் தன்மையின் குறைவால் ஏற்படுகிறது.

அப்படி என்றால் அந்த வலியை குணப்படுத்துவதற்கு நீர் சக்தியின் குறைபாட்டை சரி செய்ய வேண்டுமா ? அல்லது வலியை மட்டும் குறைப்பதற்கு பெயின் கில்லர் மருந்துகளை பயன்படுத்த வேண்டுமா ?

எந்த ஒரு பிரச்சனையும் உடலில் உடனே ஏற்பட்டு விடாது நம்முடைய அறியாமல் செய்யக்கூடிய தவறுகளை தொடர்ந்து செய்வதால் முதல் கட்டம் இரண்டாம் கட்டம் என்று அடுத்ததாக மூன்றாம் நிலைக்கு நாம் தள்ளப்பட்ட பிறகு தான் அதனுடைய முழுமையான பாதிப்பை தெரிந்து கொள்கிறோம். 

மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு பிரச்சனையை உடனே சரியாக வேண்டும் என்று நினைத்து நவீன மருத்துவத்தின் துணையோடு அந்த மூட்டில் ஏற்படக்கூடிய வலியை மட்டுமே நிறுத்தும் வேலையை செய்கிறோம். 

மூட்டு வலியை [joint pain] போக்க நிரந்தர தீர்வு என்ன?

நீங்கள் செய்த தவறுகளை படிப்படியாக குறைத்து உங்களுடைய மூட்டு வலி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த நீர் சக்தியின் பற்றாக்குறையை சமநிலைப்படுத்தி, நீர் சக்தியை பலப்படுத்தும் பொழுது,  நீர் சக்தி பலம் அடைந்து அதன் மூலம் அந்த கார்டிலேச் [cartilage] என்ற ஜவ்வும்  சைனோவியல் ஃபலூயிட் [Synovial fluid] திரவமும் பலமடையும்  பொழுது உங்கள் மூட்டு வலி இயல்பாக முழுமையாக குணமாகும். அதன் பிறகு உங்களுக்கு மீண்டும் மூட்டு வலி ஏற்படாது நீங்கள் எந்த மருந்து மாத்திரையும் பயன்படுத்தத் தேவையில்லை. 

அதே போல தான் ரொமட்டாய்டு ஆர்த்தரைடீஸ் என்ற மூட்டு வலிக்கும் மூட்டுகளில் தேங்கியுள்ள கழிவுகளின் தேக்கம் தான் காரணமே தவிர நோய் எதிர்ப்பாற்றலே மூட்டுகளின் செல்களை அளிக்கிறது என்று சொல்லக்கூடிய [Autoimmune disease] என்பது கிடையாது.

மற்றும் கௌட்டி ஆர்த்தரைடீஸ் என்ற பிரச்சனைக்கு நாம் உணவின் மூலம் செய்யக்கூடிய தவறுகளால் உடலில் யூரிக் ஆசிட் என்ற கழிவு தேக்கம் ஏற்பட்டு முழுமையாக வெளியேறாமல்  உடலில் உள்ள இணைப்பு எலும்புகளில் தங்குவதால் இந்த மூட்டு வலி ஏற்படுகிறது.

நவீன மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வகையான மூட்டு வலிகளுக்கும் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளின் தேக்கமும் நீர் சக்தியின் குறைபாடுமே முக்கிய காரணமாகும். 

மூட்டு வலி[joint pain] முழுமையாக குணமாக வேண்டும் என்றால் உங்கள் உடலில் உள்ள கழிவு தேக்கத்தை வெளியேற்றி நீர் சக்தியை பலப்படுத்துவதே மூட்டு வலிக்கான சிறந்த மருத்துவமாகும். 

மூட்டு வலி[joint pain] ஏற்படுவதற்கு உடல் எடை அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது அல்லவா ?

அது உண்மைதான் !

உடல் எடை அதிகரிப்பு என்பதும் உடலில் உள்ள கழிவு தேக்கத்தின் விளைவு தான்.

மனிதன் அறியாமல் செய்யும் தவறால் உடலில் எவ்வாறு கழிவு தேக்கம் ஏற்பட்டு மூட்டு வலி ஏற்படுகிறதோ அதே கழிவு தேக்கத்தின் விளைவால் தான் உடல் பருமனும் ஏற்படுகிறது.

அந்த உடல் பருமன் மூட்டு வலியை மேலும் அதிகரிக்க செய்கிறது. ஆகையால் உங்கள் வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடித்து கழிவு தேக்கம் இல்லாமல் வாழும் பொழுது உடல் பருமன் என்ற பிரச்சனையும் குணமாகும் உடலில் உள்ள மற்ற நோய்களும் குணமாகும்.

அக்குபஞ்சர் மருத்துவத்தில் மூட்டுவலியை குறைத்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலின் நீர் சக்தியை பலப்படுத்த முடியும்.

நீர் சக்தி ஒழுங்குபடுத்த வேண்டுமென்றால், உங்கள் வாழ்வியலில் அறியாமல் செய்யக்கூடிய தவறுகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.

மனிதர்களில் பலர் தன்னை அறியாமல் சில தவறுகளையும் அறிந்தே சில தவறுகளையும் செய்கிறார்கள்.

உடலுக்கு நேர் எதிராக செய்யக்கூடிய செயலை நிறுத்திவிட்டு உடலின் இயல்புக்கு எது சிறந்ததோ அதை மட்டுமே கடைப்பிடித்துப் பாருங்கள். மருத்துவ செலவுகள் முழுமையாக குறைக்கப்பட்டு அதனால் நீங்கள் படும் வேதனையும் முழுமையாக குறைக்கப்பட்டு இனிவரும் நாட்களில் மூட்டு வலி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 இதையும் படிக்கவும் :  ஹெர்னியாவிற்கு (hernia) ஆப்ரேஷன் தேவையா ?

                                                                                   அக்கு ஹீலர் -   ச. சையத் அஜ்மல்

Thanks for reading my article.

Contact Number for Acupuncture Treatment: +91 9443444849

Previous Post Next Post

نموذج الاتصال