மைதா என்பது கார்போஹைட்ரேட் [Carbohydrate] அதாவது மாவுச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும்.
uyiratral |
{getToc} $title={Table of Contents}
ஆகையால் மைதாவை நாம் தாராளமாக உண்ணலாம். மைதாவில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய வெண்மையான மற்றும் மென்மையான மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகள் தான் நமக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய உணவாக இருக்கிறது.
வெண்மையான மைதா ஆபத்தானதா? ஏன்?
மைதாவின் உண்மையான நிறம் என்பது பழுப்பு நிறத்தில் அதாவது கோதுமை நிறத்தில் தான் இருக்கும். ஏனென்றால் மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒரு பொருள் தான்.
கோதுமையில் மூன்று வகை லேயர் உள்ளது.
1. எண்டோஸ்ஃபார்ம். [Endosperm]
2.ஜெம். [Germ]
3. பிரான். [Bran]
என்று மூன்று வகை உள்ளது. இதில் எண்டோஸ்ஃபார்ம் [Endosperm] என்கிற ஒரு பிரிவில் இருந்து தான் மைதா தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா என்பது பழுப்பு நிறத்தில் தான் இருக்கும்.
இந்த எண்டோஸ்ஃபார்ம் [Endosperm] என்பது கோதுமையினுடைய சக்கை என்று கூறலாம் இதிலிருந்து தயாரிக்கப்படக்கூடிய மைதாவில் எந்த பிரச்சனையையும் இல்லை ஆனால் அந்த பழுப்பு நிறத்தில் உள்ள மைதாவை இந்தியர்களின் மனதை கவர வேண்டும் என்று வெண்மையாக்குவதற்காக பென்சாயில் பராக்சைடு [Benzoyl peroxide] என்ற ஒரு கெமிக்கல் அதில் கலக்கப்படுகிறது.
மற்றும் அந்த மைதாவை மென்மையாக்க வேண்டும் என்பதற்காக சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக முதலில் எலியின் கணையத்தை சேதப்படுத்துவார்கள். அப்படி எலியின் கணையத்தை சேதப்படுத்துவதற்காக அலாக்சான் [Alloxan] என்ற கெமிக்கலை எலிக்கு கொடுப்பார்கள். அலாக்சான் [Alloxan] என்ற கெமிக்கலை எலிக்கு கொடுத்து எலியின் கணையத்தை சேதப்படுத்தி அதன் பிறகு சர்க்கரை நோய் மருந்தை எலிக்கு கொடுத்து பரிசோதனை செய்வார்கள்.
அந்த எலியின் கணையத்தை சேதப்படுத்தக்கூடிய ஒரு கெமிக்கல் தான் அலாக்சான் [Alloxan] என்ற கெமிக்கல்.
அந்த அலாக்சான் [Alloxan] என்ற கெமிக்கலை தான் மைதாவை மென்மையாக்குவதற்காக பயன்படுத்துகிறார்கள். ஆகையால் இந்த இரு வகையான கெமிக்கல் இருப்பதால் தான் நம்முடைய உணவில் மைதா என்பது ஆபத்தான ஒன்றாக இருக்கிறது.
ஏற்கனவே மைதா என்பது மாவுச்சத்து நிறைந்த பொருள். ஆகையால் அதை சாப்பிடும் பொழுது நம்முடைய கணையத்திலிருந்து இன்சுலின் அதிகமாக சுரக்கும். அதே வேளையில் இன்சுலினை சுரக்கும் கணையத்தை சேதப்படுத்தக் கூடிய கெமிக்கலை அதாவது அலாக்சான் என்ற கெமிக்கலை இந்த மைதாவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த மைதாவை நாம் உட்கொள்ளும் பொழுது மனிதனுடைய அந்த கணையம் பாதிக்கப்படுகிறது. ஆகையால் இதுபோன்று ரசாயனங்கள் கலக்கப்பட்ட வெண்மை மற்றும் மெண்மை தன்மை உள்ள மைதாவை பயன்படுத்தி அதன் மூலம் தயாரிக்கப்படக்கூடிய பேக்கரி பொருட்கள், பிரட்(bread), பிஸ்கட்(biscuit), கேக்(cake), பண்(bun),பரோட்டா(parotta) என்று இவை அனைத்தும் நமக்கு ஆபத்துக்களை விளைவிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
இன்று சர்க்கரை நோய்கள் அதிகரிப்பதற்கு இந்த மைதாவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
அப்படி என்றால் மைதாவை பயன்படுத்தவே கூடாதா?
இது போன்ற மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தினசரி பயன்படுத்தாமல் எப்போதாவது ஆசைப்பட்டால் அல்லது சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம். அப்பொழுது நம்முடைய எதிர்ப்பு சக்தி அந்த கெமிக்கலை ஓரளவு வெளியேற்ற முயற்சி செய்யும் மற்றும் உடலில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தினசரி உணவாக உண்ணாமல் எப்போதாவது உட்கொள்ளுங்கள்.
மைதா உணவுகளை உட்கொண்டால் செரிமான கோளாறு ஏற்படுமா?
மனிதனின் செரிமானத்திற்கு மிக முக்கியமான சத்தாக இருக்கக்கூடியது நார்ச்சத்து தான் அந்த நார்ச்சத்து மைதா உணவுகளில் ஜீரோ சதவீதத்தில் தான் இருக்கிறது அதனால் தான் மைதா உணவுகளை உட்கொண்டால் செரிமானம் கோளாறு ஏற்பட்டு மலம் வெளியேறுவதில் சிக்கல் உருவாகிறது.
நாம் நவீன உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகையால் அனைத்து உணவிலும் ரசாயன கலப்பு உள்ளது. எனவே இதுபோன்ற ரசாயனங்களின் பாதிப்பு அதிகமாக உள்ள உணவுகளையும் மற்றும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் மட்டும் சாப்பிடுங்கள்.முக்கியமாக பசி ஏற்பட்ட பிறகு சாப்பிடுங்கள். இது போன்ற உணவுகளை கண்டிப்பாக தினசரி உணவுகளில் இருந்து தவிர்த்து விடுங்கள்.
அக்கு ஹீலர் - ச. சையத் அஜ்மல்