uyiratral |
{getToc} $title={Table of Contents}
வாயில் ஏற்படும் இந்த துர்நாற்றத்தினால் ஒருவரிடம் பேசும் பொழுது எதிரில் உள்ள நபர்கள் முகம் சுழிக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது.
இதுபோன்று வாய் துர்நாற்றம் ஏற்படும் போது அந்த துர்நாற்றம் ஏற்படக்கூடிய நபர் வாயில் மவுத் பிரெஷ்னர் என்று சொல்லக்கூடிய பலவகையான கெமிக்கல் கலந்த சில ஸ்பிரே மற்றும் ஏதேனும் மிட்டாய் போன்றவைகளை பயன்படுத்தி அந்த வாய் துர்நாற்றத்தை போக்குகின்றனர்.
வாய் துர்நாற்றத்திற்கு மௌத் ப்ரெஷ்னரை பயன்படுத்துவது சரியான தீர்வா?
வாயில் துர்நாற்றம் ஏற்படுவது என்பது வாயில் உள்ள பிரச்சனை என்று பல பேர் தவறாக நினைத்து கொண்டு வாய்க்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள். வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் பிரச்சனை வாயில் அல்ல, அது உங்கள் வயிற்றில் உள்ள பிரச்சனை உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மட்டுமே அதன் விளைவாக உங்கள் வாயில் துர்நாற்றம் ஏற்படும்.
பற்கள் இடையில் ஏதேனும் உணவு இருந்தாலோ அல்லது நாம் பல் துலக்க வில்லை என்றாலோ வாயில் துர்நாற்றம் ஏற்படும். ஆனால் அவை நாம் பல் துலக்கிய பின்பு ஏற்படாது. பல் தூக்கிய பின்பும் உங்கள் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் உங்கள் வயிற்றில் கழிவு தேக்கம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகையால் நீங்கள் மௌத் ப்ரஷ்ணர் என்று எதையாவது வாயில் பயன்படுத்தினால் தற்சமயத்திற்கு அந்த கெமிக்கல் கலந்த மவுத்ப்ரெஷ்னர் உங்கள் வாயில் உள்ள வாடையை திசை திருப்பும் ஆனால் உங்கள் வாயில் மீண்டும் துர்நாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். பிற்காலத்தில் இது பெரும் விளைவை ஏற்படுத்தும். ஆகையால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் உங்கள் வயிற்றில் உங்கள் பெருங்குடலில் கழிவு தேக்கம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் வயிற்றில் புண் இருந்தாலும் இது போன்று வாயில் துர்நாற்றம் ஏற்படும். நீங்கள் தினசரி இரண்டு முறை பல் துலக்கினாலோ அல்லது இரவு நேரத்தில் வாயை கொப்பளித்துவிட்டு ஏலக்காயை பயன்படுத்தினாலோ இந்த வாய் துர்நாற்றம் நீங்காது. ஆகையால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு காரணம் உங்கள் வயிற்றில் தேங்கியுள்ள கழிவுகள் தான்!
வயிற்றில் ஏன் கழிவுகள் தேங்குகிறது?
நாம் உண்ணக்கூடிய உணவின் மூலம் தான் கழிவுகள் தேங்குகின்றது. இது ஒரு அடிப்படையான விஷயம். ஆகையால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் உணவில் உள்ள ஒழுக்கத்தை கடைபிடிப்பதாகும் .
நாம் உணவு உண்பது, இந்த உடலின் ஆற்றல் தேவைக்கு என்பதால் இந்த மனித உடல் தனக்கு ஆற்றல் தேவைப்படும் பொழுது பசி என்ற உணர்வை ஏற்படுத்தும். கண்டிப்பாக அப்போது மட்டும் தான் நாம் உணவு உண்ண வேண்டும்.
அப்படி உண்ணும் பொழுது தான் அந்த உணவு நம் வயிற்றில் முழுமையாக செரிமானமாகி அந்த உணவில் உள்ள சத்துக்கள் பிரிக்கப்பட்டு எஞ்சியுள்ள கழிவுகள் மலம் வழியாக வெளியேற்றப்படும்.
ஆனால் இன்று பெரும்பாலான நபர்கள் பசி என்ற உணர்வை மறந்து மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்ற ஒரு தவறான கண்ணோட்டத்தில் பசி இருக்கிறதோ இல்லையோ அதை பற்றி கவலைப்படாமல் மூன்று வேளை தொடர்ந்து உணவு உண்ணுகின்றார்கள் .
இரண்டாவது எந்த நேரத்திலும் தோணும்போதெல்லாம் நொறுக்கு தீனிகளை (ஸ்னாக்ஸை ) தொடர்ந்து உண்ணுவது.
மூன்றாவது இரவில் நாம் உறங்க செல்லக்கூடிய நேரத்தில் மாமிச உணவுகளையும், கெமிக்கல் கலந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் அதிகப்படியாக தொடர்ந்து உண்ணுவது. இப்படி உண்ணுவதால் நம் பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் கழிவு தேக்கம் ஏற்பட்டு வயிற்றில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் அங்கேயே கெட்டுப் போவதால் அங்கு உள்ள அந்த கெட்டுப்போன உணவில் இருந்து வரக்கூடிய அந்த வாடை தான் உங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் உங்கள் வாய்யை நீங்கள் சுத்தம் செய்தால் போதாது கண்டிப்பாக உங்களுடைய பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டும்.
நாட்டு மருந்து கடையில் உள்ள ஏதேனும் ஒரு பேதி மாத்திரையை பயன்படுத்தி அதாவது,
* ராஜ பேதி மருந்து
* கடுக்காய் பொடி
* விளக்கெண்ணெய்
என்று ஏதாவது ஒரு மருந்தை விடுமுறை நாட்களில் காலை எழுந்து எந்த உணவும் சாப்பிடாமல் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு மருந்தை மட்டும் பயன்படுத்தும் போது வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். மூன்று நான்கு முறை பேதியாகும். அப்பொழுது நீங்கள் இலகுவான சுடுதண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும்.
வேறு எந்த உணவும் உண்ணக்கூடாது. அந்த சுடுதண்ணியில் சிறிது நாட்டுச்சர்க்கரையும் சிறிது கல்உப்பும் பயன்படுத்தி குடித்தால் உங்களுக்கு மலம் வெளியேறும் பொழுது களைப்பு ஏற்படாமல் இருக்கும்.
வயிறு சுத்தமாகி விட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?
மலம், தண்ணீர் போல வெளியேறிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு இயல்பாக சிறுநீர் வெளியேறாது. எப்பொழுது உங்களுக்கு சிறுநீர் இயல்பாக வெளியேறுகிறதோ அப்பொழுது உங்கள் வயிறு சுத்தமாகிவிட்டது என்று புரிந்து கொள்ளலாம்.
உங்கள் வயிறு சுத்தமாகிவிட்டது என்பது உறுதியான பிறகு நீங்கள் பால் சேர்க்காமல் சாதாரண பிளாக் காபி குடிக்கும் பொழுது உங்கள் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
இப்படி சுத்தம் செய்யும் பொழுது உங்கள் பெருங்குடலிலுள்ள கழிவுகள் சுத்தமாகி அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
மீண்டும் உங்கள் வயிற்றில் கழிவுகள் சேராமல் இருப்பதற்கு நீங்கள் பசி என்ற உணர்வை சரியாக கவனித்து உணவு உண்ணுங்கள். இரவு கண்டிப்பாக மாமிச உணவுகளை தவிர்த்து விட்டு எளிமையான உணவுகளையம் பழங்களையும் உண்ணுங்கள். பழங்கள் உண்ண பிடிக்கவில்லை என்றால் இடியாப்பம், இட்லி போன்ற அதற்கு அடுத்தபடியாக உள்ள எளிமையான உணவை இரவு 9 மணிக்கு முன்பாக பசி ஏற்பட்டால் உண்ணுங்கள் இரவு 11 மணி ஆகிவிட்டால் கண்டிப்பாக எந்த உணவும் உண்ண வேண்டாம்.
வாயில் உள்ள துர்நாற்றத்தை முழுமையாக குறைப்பதற்கு மேலே சொல்லப்பட்ட அந்த வழிமுறைகளை கடைபிடியுங்கள்.
இதுதான் உங்கள் வாய் துர்நாற்றத்தை முழுமையாக குறைப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்.
அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்
மரபு வழி அக்குபஞ்சர் சிகிச்சையாளர்