குளிர்பானங்கள் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?


SOFT DRINKS UYIRATRAL

                     What happens if you drink soft drinks everyday?{getToc} $title={Table of Contents}

ஒவ்வொரு திரவ உணவிற்கும் ஒரு PH அளவு உள்ளது. PH அளவு என்றால் பொட்டன்சியல் ஆஃப் ஹைட்ரஜன். (Potential of Hydrogen).

PH அளவு என்பது 0 முதல் 14 வரை அளவிடப்பட்டுள்ளது.  

PH அளவு என்பது 0 முதல் 7 வரை அமிலத்தன்மையாகவும் (acid )7 முதல் 14 வரை காரத்தன்மையாகவும் (alkaline) இருக்கும்.

நாம் அருந்தக்கூடிய ஒவ்வொரு  திரவ உணவிற்கும் ஒரு PH அளவு உள்ளது. அந்த PH அளவு என்பது 7- க்கு மேலிருந்தால்  காரத்தன்மை உள்ள ஒரு உணவாக இருக்கும். 

7- க்கு கீழே உள்ளதாக இருந்தால் அது அமிலத்தன்மை உள்ள உணவாக இருக்கும்.  அமிலத்தன்மை அதிகமாக உள்ள உணவாக இருந்தால்,  அது நம் உடம்புக்கு கடும் விளைவை ஏற்படுத்தக்கூடும்.

PH அளவு 4- க்கு கீழே இருந்தாலோ 7- க்கு மேலே இருந்தாலோ அதில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது.

4 முதல் 7 வரை PH அளவு உள்ள திரவ உணவுகளில் உயிரினங்கள் வாழும் வளரும்.

மனிதனுடைய ரத்தத்தின் PH அளவு என்ன?

மனிதனுடைய ரத்தத்தின் PH அளவு என்பது 7.4 என்ற அளவுகளில் எப்போதும் இருக்கும். அப்படித்தான்  இருக்க வேண்டும்.  அதிலிருந்து சிறிதளவு குறைந்தாலும் நாம் இறக்கும் நிலை ஏற்படும். 

அப்படி நம் ரத்தத்தில் உள்ள PH  அளவு. 7.4 இல் இருந்து குறைந்தால் உடனே நம் உடலின் எதிர்பாற்றல் குறைந்துள்ள அந்த PH  அளவை உடனடியாக உயர்ந்த வேண்டும் என்று முயற்சி செய்யும். இல்லை என்றால் இந்த உடலை விட்டு உயிர் பிரிந்து விடும்.

COOL DRINKS UYIRATRAL
UYIRATRAL

 குளிர்பானங்கள் குடித்தால் என்ன ஆகும் ?

பாட்டிலில் அடைக்கப்பட்ட ரசாயன பழ சாறுகள், குளிர்பானங்கள், மில்க் ஷேக் என்று பலவித நிறுவனங்கள் டப்பாவில் அடைத்து Health drinks என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு வியாபாரம் செய்கிறார்கள். 

ஒரு நிறுவனம் தயாரிக்கப்படக்கூடிய குளிர்பானங்கள் என்பது வருடக்கணக்கில் சேமித்து வைக்கப்பட்டு வியாபாரங்கள் செய்யப்படுகிறது. அப்படி சேமித்து வைக்கப்படும் பொழுது அதில் எந்த உயிரினமும் அதாவது பூச்சிகளோ அல்லது புழுக்களோ உற்பத்தியாகி விடக் கூடாது என்றால் அதனுடைய PH அளவை குறைத்து வைத்தால் மட்டுமே அது சாத்தியம். அப்போது தான் அதில் எந்த உயிரினங்களும் வாழாமல், அதாவது கெட்டுப் போகாமல் இருக்கும்.

PH அளவை அதிகப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. ரசாயன மருந்துகளால் PH  அளவை அதிகப்படுத்த முடியாது. ஆகையால் குளிர்பான நிறுவனங்கள் PH அளவை குறைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி குறைத்தால் மட்டுமே அந்த குளிர்பானங்கள் என்பது பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

குளிர்பானங்களின் PH அளவு என்ன?

குளிர்பானங்களின் PH  அளவு என்பது சுமாராக 2.8 என்ற அளவில் தான் இருக்கும். அதாவது நான்குக்கு கீழே உள்ள அளவில் தான் இருக்கும். ஏனென்றால் அப்பொழுதுதான் அந்த குளிர்பானத்தில் உயிரினங்கள் வாழ முடியாது ஆகையால் அந்த குளிர்பானங்கள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்தக் கூடிய உணவாக இருக்கும். PH  அளவு குறைவாக உள்ளது என்பது முழுக்க முழுக்க அமிலத்தன்மை  உடையது.

2.8 அளவு கொண்ட அமிலத்தன்மை  உடைய குளிர்பானங்களை குடித்தால் நம் உடலுக்குள் என்ன நடக்கும்?

நம்முடைய ரத்தத்தின்  PH அளவு என்பது 7.4 என்பதால் இந்த 2.8 PH  அளவு கொண்ட அமிலத்தன்மை  உடைய குளிர்பானங்களை குடிக்கும் பொழுது நம் ரத்தத்தின் PH அளவு என்பது மடமடவென குறைய துவங்கும். உடனே நம் உடலின் எதிர்பாற்றல் நம் உடலில் ஏற்கனவே  எலும்புகள், தசை நார்கள், கல்லீரல் என பல பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்துக்களை எடுத்து ரத்தத்தில்  கொட்டும். குறைத்துள்ள  PH அளவை மீண்டும் 7.4க்கு கொண்டு செல்ல முயற்சி செய்யும்.

சத்துக்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக உடலில் சேர்வதால் நமக்கு உற்சாகமாக தோன்றும் இதைத்தான் உற்சாக பானம் என்று அழைக்கின்றனர். ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. 

நம்முடைய உடல் எமர்ஜென்சி தேவைக்காக அவசர தேவைக்காக நம் உடலில் உள்ள சத்துக்களை தசைநார்கள், எலும்புகள் என பல இடங்களில் கிளைக்கோஜனாக (Glycogen) சேமித்து வைத்திருக்கும்.

உடலில் பல பகுதிகளிலும் உயிர்காக்கும் மருந்தாக சேமித்து வைத்திருக்கும் அந்த சத்துக்களை எதற்கும் உதவாத இந்த தரமற்ற குளிர்பானத்தை குடிப்பதால் உங்கள் உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் உடலில் இருந்து காலி செய்யப்படுகிறது.

இன்று பெரும்பாலான நபர்கள் மாமிச உணவுகளை உட்கொண்டு விட்டு அந்த உணவு செரிமானமாக வேண்டும் என்பதற்காக இந்த குளிர்பானங்களை உணவு உண்ட உடனே அருந்துகிறார்கள். இதனால் உங்கள் உடலில் PH அளவு குறைவது மட்டுமின்றி நீங்கள் உண்ட உணவில் உள்ள சத்துக்களும் முழுமையாக கிடைப்பதில்லை. மாறாக உடலில் கழிவுகளின் தேக்கம் தான் ஏற்படும். ஆனால் உங்களுக்கு செரிமானம் ஆனது போன்று ஏப்பம் மட்டும் வரும்.

எதற்காக இப்படி அளவுக்கு அதிகமான உணவுகளை அதுவும் பசியற்ற நிலையில் உண்ண வேண்டும். அப்படி சாப்பிட்ட உணவை குளிர்பானத்தை கொண்டு செரிமானம் செய்ய வேண்டும். இதனால் ஆபத்து யாருக்கு என்பதை பற்றி சிந்தித்தீர்களா!


COOL DRINKS UYIRATRAL

Is it OK to drink soft drinks everyday?

பசி என்ற உணவு ஏற்பட்ட பிறகு வயிறு நிரம்பாத அளவு உணவை உட்கொண்டு பாருங்கள்.  நீங்கள் உண்ட உணவை செரிமானம் செய்வதற்கு எந்த குளிர்பானங்களும் தேவைப்படாது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட ரசாயன பழச்சாறுகள், குளிர்பானங்கள், மில்க் ஷேக், என்று டப்பாவில் அடைக்கப்பட்டு சத்து நிறைந்த பானங்கள் (Health drinks ) என்று விளம்பரம் செய்யப்படக்கூடிய எந்த ஒரு பானங்களையும் அருந்தாதீர்கள்.

Is it OK to drink soft drinks everyday?

அதற்கு மாற்றாக ஜுஸ் கடைகளில் இயற்கையாக கிடைக்கும் பழ சாறுகள், இளநீர், கரும்பு சாறு போன்ற திரவ உணவுகளை அருந்தினால் உங்கள் உடலில் சத்துக்கள் நிறைந்து உடல் ஆரோக்கியத்தோடு எந்த நோயும் இன்றி வாழக்கூடிய நிலை ஏற்படும்.

                                           UYIRATRAL

                       அக்கு ஹீலர் - ச. சையத் அஜ்மல்

இதையும் படியுங்கள் : ஹெர்னியாவிற்கு(hernia) ஆப்ரேஷன் தேவையா ?

Thanks for reading my article.

Contact Number for Acupuncture Treatment: +91 9443444849

Previous Post Next Post

نموذج الاتصال