wheezing _uyiratral |
UYIRATRAL
வீசிங் என்ற மூச்சு திணறல் நோய் உடனே வந்து விட கூடிய ஒரு நோயல்ல !
அதை நாம் குழந்தையிலிருந்து உருவாக்கிக் கொண்டு வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த வீசிங் பிரச்சனை உள்ளது.
ஏன் இந்த வீசிங் பிரச்சனை வருகிறது?
எதற்கு மருந்து சாப்பிடுகிறோம்? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த நோய் வரும்.
இது மிகவும் ஒரு சாதாரணமான அடிப்படையான விஷயம் இந்த விஷயத்தை அறியாமல் நாம் செய்யக்கூடிய தவறுகள் தான் வீசிங் என்கிற .மூச்சுத் திணறல் என்ற நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது .
ஒரு சாதாரண அடிப்படையான கேள்வி கேட்கிறேன் அதற்கு சரியான பதிலை நீங்களே கூறுங்கள்! What causes wheezing?
சளி என்ற ஒரு கழிவு நம் நுரையீரலில் உற்பத்தி ஆகிவிட்டது. அது ஏன் உற்பத்தி ஆனது என்று பின்னர் கூறுகிறேன்.
உற்பத்தியாகிவிட்டது உற்பத்தியான இந்த சளி என்ற கழிவு நுரையீரலில் உள்ளே இருக்க வேண்டுமா ?அல்லது வெளியேற வேண்டுமா?
அனைவருக்கும் தெரியும் நுரையீரலில் சளி ஏற்பட்டால் அந்தக் கழிவுகள் வெளியில் தான் வர வேண்டும் என்று ஆனால் நாம் சளி வெளியில் வர அனுமதிக்கின்றோமா?
சளி வெளியில் வரும் பொழுது நமக்கு சில தொந்தரவுகள் ஏற்படத்தான் செய்யும் அந்தத் தொந்தரவை தாங்க முடியாதவர்களும் அந்த தொந்தரவுகளை நோய் என்று கருதக் கூடியவர்களும் அதற்கு பலவகையான ரசாயனம் கலந்த மருந்துகளை பயன்படுத்தி வெளியேற வேண்டிய சளி என்ற அந்த கழிவை நுரையீரலில் உள்ளேயே தங்க வைக்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அடுத்து என்ன நடக்கும்.
நுரையீரலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகள் நுரையீரல் உள்ளே தங்குவதால் அந்த சளி கழிவின் தன்மை மாறி அது நுரையீரலின் நுண் அறைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மூக்கு ஒழுகுதல், இருமல் போன்ற வழிகளில் சளி என்ற கழிவை இந்த மனித உடல் வெளியேற்றும் போது அதற்கு நேர் மாறாக நாம் மருந்துகள் அல்லது டானிக்குகளை பயன்படுத்தி மீண்டும் நுரையீரல் பக்கமே அனுப்புவதால் நுரையீரலில் சளிகளின் தேக்கம் அதிகமாகிறது.
ஒரு முறை நீங்கள் சளிக்கு மருந்து சாப்பிட்டால் அத்துடன் முடிந்து விடும் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் ஒவ்வொரு முறையும் மருந்து சாப்பிட்டு உள்ளே அடக்கினாலும் நம் உடலில் எதிர்ப்பு சக்தி எப்பொழுது கூடுகிறதோ அப்பொழுது மீண்டும் அந்த சளி கழிவுகளை இந்த மனித உடல் வெளியேற்றவே முயற்சி செய்து கொண்டிருக்கும்.
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள சளி கழிவுகள் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் புதிதாக சளிகள் உற்பத்தியானால் அதுவும் வெளியேற முயற்சி செய்யும்.
நாம் ஏற்கனவே அடக்கி வைக்கப்பட்ட சளியின் தன்மை மாறிய நிலையில் மீண்டும் சளி வெளியேற முயற்சி செய்யும்பொழுது அதனுடைய தாக்கம் இன்னும் அதிகமாக ஏற்படும். அதனால் தொந்தரவுகள் கூடிக் கொண்டே போகும். Is wheezing serious?
நாம் இந்த தொந்தரவுக்கு பயந்து மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும் பொழுது அந்த மருந்தின் விளைவாக ஈரமான நிலையில் உள்ள அந்த சளி கழிவுகள் அதீத வெப்பமடைந்து நுரையீரலில் பவுடர் நிலையில் மாற்றமடைந்து நுரையீரலின் நுண் அறைகள் முழுவதும் அடைக்கப்படுகிறது.
இதனால் இயல்பாக சுவாசிக்க வேண்டிய நம்முடைய நுரையீரல் சுவாசிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. இதுவே வீசிங் என்ற மூச்சு திணறல் நோய் ஏற்படுவதற்கான காரணமாகும்.
நுரையீரல் என்பது சுருங்கி விரிய கூடிய ஒரு உறுப்பு அது நாம் சுவாசிக்கக்கூடிய காற்றில் உள்ள ஆக்சிஜன் என்ற சத்து பொருளை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடு என்கிற கழிவு பொருளை வெளியேற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
அந்த நுரையீரலில் உள்ளே பல நுண் அறைகள் உள்ளன அந்த நுண் அறைகளில் அடைப்பு ஏற்பட்டால் என்னவாகும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் , எந்த மருந்துகள் இந்த நிலைக்கு கொண்டு சென்றனவோ அதே மருந்துகள் மூலம் மீண்டும் அந்த மூச்சுத் திணறல் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதாவது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அதற்கு செயற்கையான முறையில் நெப்லைசர் என்ற ஒரு உபகரணத்தை பயன்படுத்தி மருந்துகளை உள்ளே செலுத்துகின்றனர். இதனால் மீண்டும் நுரையீரலின் தன்மை இன்னும் மோசமாகும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த மனித உடல் எக்காரணம் கொண்டும் கழிவுகளை உடலில் உள்ளே வைத்திருக்க அனுமதிக்காது. ஏதேனும் ஒரு வகையில் வெளியேற்றும் வேலையை செய்து கொண்டே இருக்கும். இப்பொழுது உங்கள் நுரையீரலில் சளி கழிவுகள் சேர்ந்து விட்டது, இதை வெளியேற்றி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் நம் உடலின் எதிர்பாற்றல் சளியை வெளியேற்றுவதற்காக மூக்கின் வழியாகவும் இருமல் வழியாகவும் வெளியேற்ற முயற்சி செய்யும் அப்போது நமக்கு சில தொந்தரவுகள் ஏற்படும்.
(வீசிங் ப்ராப்ளம் என்றால் என்ன?)
வீசிங் என்ற மூச்சு திணறல் நோய்க்கு தீர்வு என்ன ? What is the cure for wheezing?
மூச்சுத் திணறல் என்பது கொஞ்சம் கடினமான ஒரு வேலையாக இருந்தாலும் அதனை நாம் படிப்படியாக கண்டிப்பாக குறைத்து இயல்பு நிலைக்கு திருப்பி விட முடியும்.
அதற்கு கொஞ்சம் பொறுமையோடும் சில தொந்தரவுகளை சகித்துக் கொண்டும் நாம் சில வேலைகளை செய்தால் முழுமையாக இதிலிருந்து விடுபட முடியும். இதுதான் ஒரே வழி வேறு மாற்று வழிகள் கண்டிப்பாக கிடையாது.
உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும் பொழுதும், தேவையற்ற தூசுக்கள் உங்கள் மூக்கில் வழியாக நுழையும் பொழுதும்,குளிர் காலத்தில் உடலில் நீர் தன்மை அதிகமாகும் பொழுதும் உங்களுடைய உடல் அந்த சளி கழிவுகளை வெளியேற்றும் வேலையை மீண்டும் செய்ய துவங்கும்.
Does wheezing mean sick?
அப்பொழுது நீங்கள் எக்காரணம் கொண்டும் அதை உள் அடக்கும் வேலையை எதுவும் செய்யாமல் பொறுமை காக்க வேண்டும் கண்டிப்பாக நெப்லைசர் என்ற உபகரணத்தை பயன்படுத்தக் கூடாது.
பவுடர் நிலையில் உள்ள அந்த சளியை படிப்படியாக ஈர நிலைக்கு நாம் திருப்பக் கொண்டு வர வேண்டும்.
அதற்காக நுரையீரல் பலமடைய கூடிய சில இயற்கையான உணவுகளையும் உங்கள் காற்று சக்தியும் பலப்படுத்தும் வேலையையும் செய்ய வேண்டும்.
மூச்சு திணறல் (வீசிங்) குணப்படுத்தும் வழிமுறைகள் :
- உங்கள் நுரையீரலுக்கு காற்றின் சக்தி அதிகமாக கிடைப்பதற்கு இரவு ஏசியை பயன்படுத்தாமல் காற்றோட்டம் நிறைந்த பகுதியில் உறங்குங்கள்
- சில மூச்சுப் பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்யும் பொழுதும், அதிகாலையில் எழுந்து நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுதும் உங்கள் நுரையீரல் அதிகமான பலம் அடைந்து அதில் உள்ள கழிவுகளை படிப்படியாக வெளியேற்ற முயற்சி செய்யும்.
- அதிகாலை 3மணி முதல் 5 மணி வரை நுரையீரல் நேரம் என்பதால் அந்த நேரத்தில் எழுந்து காற்றோட்டமுள்ள இடத்தில் மூச்சு பயிற்சி செய்தால் உங்கள் நுரையீரல் பலமடையும். இது தான் உங்கள் வீசிங் நோயை குணப்படுத்துவதற்கான சிறந்த வழி. மருந்து மாத்திரைகளால் ஒருபோதும் குணப்படுத்த முடியாது. மாறாக கட்டுப்படுத்தவே முடியும்.
- நுரையீரல் மீண்டும் சளிகள் அல்லாத நுரையீரலாக மாறுவதற்கு சில மாதங்கள் ஏற்படலாம். அதுவரை நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.
வீசிங் உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்?
- உங்கள் வாழ்வியலில் ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடித்து பசி என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு உணவு உண்ண வேண்டும்.
- உங்கள் நாவிற்கு பிடித்த சுவையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- முடிந்த அளவு ரசாயன கலப்புகள் இல்லாத உணவுகளை பயன்படுத்துங்கள்.
- காரம் என்ற சுவையை பயன்படுத்தினால் நுரையீரலுக்கு ஆற்றல் கிடைக்கும். எனவே, காரத்திற்காக மிளகை (pepper ) பயன்படுத்துவது சிறந்ததாகும்.
uyiratral |
- எனவே நீங்கள் உங்கள் நுரையீரலில் உள்ள சளிகள் வெளியேற வேண்டும் என்பதற்காக அதற்கான சில இயற்கையான உணவு முறைகளை பயன்படுத்தலாம்.
- உதாரணமாக, ஓமவள்ளி , சின்ன வெங்காயம், பனங்கற்கண்டு , தூதுவளை, துளசி, இஞ்சி, போன்ற பொருட்களை சளியை வெளியேற்ற பயன்படுத்துங்கள்.
- உடனே சரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகப்படியாக உங்கள் உடலுக்கு தொந்தரவு தரக்கூடிய வகையில் உணகளையோ அல்லது உங்கள் நாவிற்கு பிடிக்காமல் சளி வெளியேற வேண்டும் என்று கட்டாயத்திலோ உணவுகளை உண்ண வேண்டாம்.
- உங்கள் நாவிற்கு எந்த சுவை பிடிக்கிறதோ அதை மட்டும் உண்ணுங்கள். படிப்படியாக பொறுமையாக இதை கையாளும் பொழுது உங்களை அறியாமல் சில நாட்களில் உங்கள் நுரையீரல் சுத்தமாகிவிடுவதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
உடனே சரியாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். நுரையீரல் என்ற பாதிப்பில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால் அதை நாம் பொறுமையாக படிப்படியாக குறைப்பதே சிறந்த வழிமுறையாகும்.
அலோபதி மருந்தை பயன்படுத்தி சளியை உள்ளே அடக்குவதற்கான பதிலாக அருகில் உள்ள அக்குபங்சர் மருத்துவத்தை பயன்படுத்தினால் நுரையீரலில் உள்ள சளிகள் வெளியேறுவதற்கான சிகிச்சை அளிக்கப்படும். உங்கள் நுரையீரல் படிப்படியாக ஆரோக்கிய நிலையை அடையும்.
இதெல்லாம் உடனே ஒரு மாதத்தில் நடக்கக்கூடிய பணிகள் அல்ல. இதை நீங்கள் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு பொறுமையாக மெதுவாக படிப்படியாக உங்கள் நுரையீரலை பலப்படுத்தும் வேலையை மட்டும் செய்து கொண்டிருங்கள். உங்களை அறியாமல் சில குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நுரையீரல் கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு உங்கள் நுரையீரல் பலமடையும் உங்களுக்கு வீசிங் மற்றும் ஆஸ்துமா என்று எந்த ஒரு நோயா இருந்தாலும் முழுமையாக குணமடையும்.
- அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்