{getToc} $title={Table of Contents}
தலைவலி வர காரணம் என்ன? What is the reason for Head Ache?
இன்று பெரும்பாலான நபர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி ஏற்பட்டால் உடனே என்ன செய்வார்கள், ஏதாவது ஒரு பெயின் கில்லர் மாத்திரையை பயன்படுத்தி தலை வலியை நிறுத்தி விடுவார்கள்.
இப்படி பெயின் கில்லர் மாத்திரையை பயன்படுத்தி தலைவலியை நிறுத்துவது என்பது ஆபத்தானது என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தலைவலி ஏற்பட்டால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பெயின் கில்லர் மருந்தை பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் தலைவலி ஏற்படும் பொழுது மற்றும் உடலில் வேறு ஏதும் வலி ஏற்படும் பொழுது நீங்கள் பெயின் கில்லர் மாத்திரையை பயன்படுத்தினால் உங்கள் உடலின் உள் உறுப்பான சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்.
நீங்கள் பயன்படுத்தும் மாத்திரை ரசாயனம் கலந்த ஒரு மாத்திரை என்பதால் அந்த ரசாயனத்தை நம் உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு கடுமையான ஆற்றலை செலவு செய்கிறது.
அப்படி ஆற்றலை செலவு செய்தால் மட்டுமே அந்த மாத்திரையில் உள்ள ரசாயனத்தை உடலில் இருந்து வெளியேற்ற முடியும்.
ஒவ்வொரு முறையும் தலைவலி ஏற்படும் போது மாத்திரையை கொண்டு தலைவலியை நிறுத்துவதால் உங்கள் உடலில் உள்ள ஆற்றல் அதிகமாக செலவாகிறது.
மாத்திரையை பயன்படுத்தி தலைவலியை நிறுத்துவது என்பது சரியான முறை அல்ல…
இதனால் பிற்காலத்தில் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தலைவலி ஏற்பட்டால் அதற்கு மாத்திரையை பயன்படுத்துவது சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனால் தலைவலி ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றி சிந்திக்க வேண்டாமா ?
எதை செய்தால் மீண்டும் தலைவலி ஏற்படாமல் இருக்கும் என்பது பற்றி தானே சிந்திக்க வேண்டும்.
👉 முதலில் ஏன் தலைவலி ஏற்படுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
👉இரண்டாவதாக தலைவலி ஏற்பட்டால் மாத்திரை இல்லாமல் குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய நவீன மருத்துவத்தில் எந்த இடத்தில் பிரச்சனையோ அந்த இடத்திற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது சரியான முறை அல்ல. இப்படி செய்வதால் நமக்கு ஆபத்துதான் ஏற்படுமே தவிர ,ஒருபோதும் நோய்கள் குணமாகாது.
இன்றைய நவீன மருத்துவங்கள் தலைவலி ஏற்பட்டால் தலையை பரிசோதனை செய்து தலைக்கான சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகிறது.
ஆனால் தலைவலி என்பது தலை சம்பந்தப்பட்ட நோய் அல்ல…
அது நம் உடல் உள்ளுறுப்பு சம்பந்தப்பட்ட நோய், என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நம் உடலின் உள்ளுறுப்பில் ஏதேனும் ஒரு சில பிரச்சனை ஏற்பட்டால் அதன் விளைவு தலையில் தான் தெரியும். அதனால் தான் நமக்கு தலைவலி ஏற்படுகிறது.
அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
uyiratral head ache |
ஒரு மனிதருக்கான காரணம் இன்னொரு மனிதருக்கு ஒத்துப்போகாது. தலைவலி ஏற்படுவதற்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் இருக்கின்றன.
அதை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். அது மிகவும் இலகுவான ஒன்றுதான். அதை எப்படி கண்டுபிடிப்பது என்று நான் கூறுகிறேன்.
ஒரு மனிதருக்கு ஏற்படும் தலைவலி அதே போல இன்னொரு மனிதனுக்கு ஏற்படும் என்று கூற முடியாது.
உடல் உள்ளுறுப்பில் இருக்கக் கூடிய வெவ்வேறு விதமான காரணங்களுக்காக தலைவலி ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடிக்கடி ஏற்படும் தலைவலியை குணப்படுத்துவது எப்படி?
சில உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்:
- ஒரு நபர் காலையில் மலம் கழிக்க வில்லை என்றால் அவருக்கு பெருங்குடலின் கழிவுத்தேக்கத்தின் காரணமாக தலைவலி ஏற்படும்.
- இரவு வெகு நேரம் கண் விழித்திருந்தால் தூக்கத்தில் கிடைக்க வேண்டிய ஹார்மோன்கள் கிடைக்காத காரணத்தால் தலைவலி ஏற்படும்.
- அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தாலோ அல்லது தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ தண்ணீரை மாற்றி குடித்தாலோ சிலருக்கு தலைவலி ஏற்படும்.
- ஒருவர் வெயிலில் சென்று வந்தால் உடலில் வெப்பநிலை அதிகரிப்பால் தலைவலி ஏற்படும்.
- ஒருவர் தலைக்கு குளித்தால் அவர் உடலில் வெப்பநிலை குறைவால் தலைவலி ஏற்படும் .
- ஒருவர் அதிக தூரம் நடந்து சென்றால் தலைவலி ஏற்படும்.
- மாதவிடாய் காலத்தில் ஒரு சில பெண்கள் தலைக்கு குளித்தால் தலைவலி ஏற்படும்.
- ஒருவர் காற்றோட்டம் இல்லாத பகுதியில் இருந்தால் காற்று சக்தி கிடைக்காத காரணத்தால் தலைவலி ஏற்படும்.
இது போன்ற இன்னும் ஏராளமான காரணங்களால் தலைவலி ஏற்படுகின்றன.
ஆகையால் தலைவலிக்கு இதுதான் காரணம் என்று எல்லோருக்கும் பொதுவான ஒரு வழிமுறையை சொல்லிவிட முடியாது.
தலைவலி ஏன் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிப்பது என்பது எளிது.
நவீன மருத்துவங்கள் தலைவலி ஏன் ஏற்பட்டது என்பது பற்றி சிந்திக்காமல் தலைவலி ஏற்பட்டால் தலைவலியை நமக்கு உணர்த்தக் கூடிய மூளையில் உள்ள நரம்புகளை செயலழிக்க செய்யும் பெயின் கில்லர் மருந்தை கொடுத்து மொத்தமாக அதை நம் மூளைக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றன.
அப்போது நாம் தலைவலி இல்லாமல் வாழ்வது போன்று உணர்கிறோம்.
ஆனால் உங்கள் உடல் உள்ளுறுப்பில் உள்ள பிரச்சனை சரியாகும் வரை தலைவலி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
தலைவலி ஏற்படுவதற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து அதை சரி செய்யாமல் வலியை உணர்த்தக் கூடிய நரம்புகளை செயலிழக்க செய்வது என்பது சரியா ?
தலைவலி மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பிற்காலத்தில் அது ஒரு பெரும் நோயாக உருவெடுக்கும். அதை நாம் வேறு நோய் என்று கருதி அதற்கு தனியாக சிகிச்சை எடுப்போம் என்பதை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்.
உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால் அதற்கு நீங்கள் செய்த ஏதோ ஒரு தவறின் காரணமாக தான் அந்த தலைவலி ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அந்தத் தவறை சரி செய்தால் மட்டுமே மீண்டும் உங்களுக்கு தலைவலி வராமல் இருக்கும.
தலைவலி ஏன் ஏற்படுகிறது? What is the reason of Head Ache?
- நாம் பசி என்ற உணர்வை மறந்து பசியற்ற நிலையில் உணவு உண்பதால் உடலில் கழிவுகளின் தேக்கம் அதிகமாகி உள்ளுறுப்புக்கள் கழிவுகளை வெளியேற்றும் பொருட்டு அதிகமாக வேலை செய்வதால் தலைவலி ஏற்படும்.
- தலைவலி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பெருங்குடலில் உள்ள கழிவுகளின் தேக்கம் தான். ஆகையால் உங்கள் பெருங்குடலில் உள்ள கழிவுகள் தேக்கத்தை வெளியேற்ற வேண்டும்.
- மனிதன் இரவு கண்டிப்பாக உறங்கக்கூடிய உயிரினமாக படைக்கப்பட்டு இருப்பதால் இரவு பத்து மணிக்கு முன்பு உறங்க வேண்டும். ஆனால் நாம் இரவு வெகு நேரம் ஆகியும் உறங்காமல் இரவு பணி செய்வது, இரவு மொபைல் போனை பயன்படுத்துவது. தூங்கக் கூடிய நேரத்தில் அதிகப்படியான ரசாயனம் கலந்த உணவுகளை உண்பது போன்றவை .
- பெண்கள் மாதவிடாய் காலத்தில் கர்ப்பப்பைக்கு வெப்பம் அதிகமாக தேவைப்படும். ஆகையால் மாதவிடாய் ஏற்பட்டு இருக்க கூடிய நேரத்தில் பெண்கள் கண்டிப்பாக தலைக்கு குளிக்க கூடாது. இதை அறியாத பல பெண்கள் தலைக்கு குளிப்பதால் வெப்பத்திற்கு நேர் எதிராக கர்பப்பையை குளிர்ச்சியாக்கும் பொழுது உள் உறுப்பில் சில மாற்றங்கள் ஏற்படுவதால் பெண்களுக்கு தலை வலி ஏற்படும்.
மேலே கூறப்பட்ட இது போன்ற இன்னும் சில தவறுகளை மனிதர்கள் செய்து விட்டு அதன் விளைவாக ஏற்படும் தலைவலிக்கு மாத்திரை கொண்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் செய்யும் தவறுகளை நிறுத்திவிட்டாலே உங்கள் தலைவலி என்பது மயமாகிவிடும். நீங்கள் தவறுகளை செய்து கொண்டு அதனால் ஏற்படும் தலைவலிக்கு மாத்திரையை பயன்படுத்தி தலைவலியை மறைப்பதால், அந்த மாத்திரைகள் பிற்காலத்தில் உங்கள் உள்ளுறுப்பை செயலிழக்க செய்யக்கூடிய வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறது.
தலைவலி ஏற்பட்டால் எந்த மாத்திரையும் இல்லாமல் குணப்படுத்துவது எப்படி? How can I relieve head ache?
உங்கள் உடலின் உள்ளுறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக தான் உங்களுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு நிமிடம் நாம் தலைவலி ஏற்படுவதற்கு முன்னால் என்ன செய்தோம் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
அப்படி சிந்திக்கும் பொழுது நாம் செய்த ஏதாவது ஒரு தவறு உங்கள் நினைவுக்கு வரும்.அந்தத் தவறை மீண்டும் நீங்கள் செய்யாமல் இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக தலைவலி ஏற்படாது.
தலைவலி ஏற்பட்டால் ஒருமுறையாவது எந்த மாத்திரையும் இல்லாமல் கண்களை மூடி ஓய்வெடுங்கள். உங்கள் தலைவலி தானாக மெதுவாக குறைந்துவிடும். அப்படி எந்த மாத்திரையும் பயன்படுத்தாமல் உங்கள் தலைவலி குறைந்தால் மீண்டும் உங்களுக்கு தலைவலி ஏற்பட வாய்ப்புகள் குறைவு.
வருடக்கணக்கில் தலைவலிக்கு மாத்திரை பயன்படுத்தியவர்களுக்கு இது கொஞ்சம் கடினமாக தெரியும்.
இந்த கொஞ்சம் கடினமான போராட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே இனிவரும் நாட்களில் ஆரோக்கியமாக வாழ முடியும்.இதுவே அதற்கான ஒரே வழி.
தலைவலி குறைய இயற்கையான வழி என்ன? How to cure Head ache naturally?
தலைவலி குறையவில்லை என்று கருதக்கூடியவர்கள் தலைவலியை குறைப்பதற்கு மாத்திரையை பயன்படுத்தாமல், மற்றொரு இலகுவான வழி என்னவென்றால் உங்கள் அருகில் உள்ள அக்குபஞ்சர் மருத்துவத்தில் தொடு சிகிச்சையின் மூலம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் உடனே உங்கள் தலைவலி குறைந்து விடும் எந்த மருந்து மாத்திரைகளும் இல்லாமல்!
தலைவலிக்கு சிறந்த சிகிச்சை என்பது நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்வது தான்..
மருந்து மாத்திரைகள் அல்ல!!
அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்
இதையும் படியுங்கள் : மூச்சு திணறல் (வீசிங்) ஏற்பட்டால் குணப்படுத்துவது எப்படி ?
Tags
health