தலை முடி கொட்டுவதை நிறுத்துவது எப்படி ? ( how can stop my hair fall? )

 

hairfall reason in tamil
uyiratral

UYIRATRAL

தலை முடி கொட்டுவதற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லுகின்றனர் அப்படி கொட்டிய முடி வளர சமூக வலை தளங்களில் பலர் பல மருவத்துவ முறைகளை, பலவகையான உணவுகளை பரிந்துரை செய்கின்றனர். இப்படி செய்வது சரியா?
{getToc} $title={Table of Contents}

கொட்டிய முடி வளர பல வகையாக  பலரும் சொல்லும் எண்ணைகளை பயன்படுத்தலாமா? 

கண்டிப்பாக செய்ய கூடாது … அப்படி செய்தால் இருக்கும் கொஞ்ச முடியும் கொட்டி சொட்டையாகிவிடும். 

தலைமுடிக்கு சிகிச்சை செய்வது என்பது இரண்டாவது விஷயம் முதலில் தலைமுடி கொட்ட காரணம் என்ன என்பதற்கான பதிலை தெரிந்து கொள்ள வேண்டாமா !

முதலில் தலை முடி கொட்ட காரணம் என்னவென்று பார்ப்போம்.  நம் உடலில் தலை முடிகளை பராமரிக்க கூடியது நீர் மூலகம் தான். உடலில் அந்த நீர் மூலகத்தை ஒழுங்கு படுத்தினால் மட்டுமே முடி கொட்டுவதை நிறுத்த முடியும் வளர வைக்கவும் முடியும். வேறு எந்த எண்ணையையும் தலைக்கு தேய்ப்பதால் முடி வளராது. நம் உடலின்  நீர் மூலகத்தை ஒழுங்கு படுத்தும் வேலையை விட்டு விட்டு நீங்கள் வேறு  எந்த முறையில் சிகிச்சை செய்தலும் உணவுகளை உட்கொண்டாலும் அது பயனற்றது. 

அடிப்படை பிரச்சனையை சரி செய்யமல் additional  ஆக எது  செய்தாலும் அது கண் துடைப்பு நாடகமாகவே இருக்கும். அதில் எந்த நன்மையும் இருக்காது. யாரும் அடிப்படை பிரச்சனையை சரி செய்யும் மருத்துவ முறையை சொல்வதில்லை , additional  ஆக பல மருத்துவ முறையை சொல்லுகின்றனர்.

hairfall reason in tamil
uyiratral  _hairfall

 இப்போது முடி கொட்டுவதற்கான(hairfall) அடிப்படை பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.  நம் உடலில் நீர் சக்தி என்று ஒன்று உள்ளது. அந்த நீர் சக்தியின் இயக்க குறைவு தான்  முடி கொட்டுவதற்கு(hairfall) காரணமாக உள்ளது. அந்த நீர் சக்தியின் இயக்க குறைவுக்கு கழிவு தேக்கமே பிரதனமாக  உள்ளது. நம் உடலின் ஒழுங்கற்ற உணவு முறையும் அக சூடும் தான் நீர் சக்தியின் இயக்க குறைவுக்கு காரணம் ஆகும். 

உணவு முறையில் உள்ள ஒழுக்க மின்மை , மற்றொரு காரணம் ஆகும். இரவு வெகு நேரம் கழித்து உணவு உண்பது, ரசாயன கலப்பு அதிகம் கலந்துள்ள உணவை தெரிந்தே வயிறு புடைக்க உண்பது அதனால் இரவு தூக்கம் வீணாவது, போன்ற காரணங்கள் தான்  நீர் சக்தியின் இயக்கத்தை சீர் குலைக்கிறது.

இயற்கையான உணவுகளை வெறுத்து ஒதுக்கி தள்ளி விட்டு, ரசாயன உணவுகளை தொடர்ந்து உண்பது, முடி கொட்டுவது உட்பட பல அடிப்படை பிரச்சனைகளுக்கு இது போன்ற ஒழுங்கற்ற உணவு முறை தான் முக்கிய காரணம் ஆகும். 

இது போன்ற விஷயத்தில் கவனத்தை  செலுத்தாமல் எந்த பகுதியில் பிரச்சனையோ அந்த இடத்தில  மட்டும் சிகிச்சை செய்து வந்தால் அந்த இடம்  இன்னும் அதிக பாதிப்படையும். 

இன்றைய நவீன மருத்துவ முறையில் எந்த பகுதியில் பாதிப்போ அந்த பகுதிக்கு சிகிச்சை செய்யப் படுகிறது. அந்த பகுதிக்கான உணவு முறையும் பரிந்துரைக்கப்படுகிறது. இதுவெல்லாம் முடி வளர சாத்தியமற்றதாகும். 

பாதிப்படைந்த அந்த பகுதிக்கு சிகிச்சை செய்ய  பரிந்துரைப்பது என்பது ஒரு வியாபார நோக்கமாகவே இருக்கும். அதனால் எந்த பகுதிக்கு பிரச்சனையோ அந்த பகுதிக்கு சிகிச்சை செய்வதை விட்டு விட்டு எதனால் அந்த பகுதி பதிப்படைந்தது, எதை செய்தால் அந்த பகுதி சரி ஆகும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

முடி கொட்டுதல் (hair fall) என்பது முழுக்க முழுக்க நம்முடைய தவறான செயல்முறையும் அணுகுமுறையும் தான், நம்முடைய தவறான செயல்  முறையால் முடிகள் கொட்டிவிட்டது.

hairfall reason in tamil
uyiratral
கொட்டிய முடி (hair fall) மீண்டும் வளர வேண்டும் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய தவறான செயல்முறைகளை மாற்றிக்கொள்வது தான். அப்படி உங்கள் செயல் முறைகளை மாற்றிய பிறகு தான்  பதிப்படைந்த  பகுதி மீண்டும் பாதிப்படையாமல் இருக்கும் . 

அதன் பிறகு தான் அந்த இடம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா அல்லது அதே நிலையில் இருக்குமா என்று பார்க்க முடியும். இதுதான் யதார்த்தம் உண்மை. 

பாதிப்படைந்த தலை முடிக்கு மட்டும் தனியாக சிகிச்சை செய்வதால்    பலன் கிடைக்குமா?

கண்டிப்பாக கிடைக்காது மாறாக அந்த இடம் சில வருடங்களில் முழுமையாக பாதிப்படைந்து சொட்டை ஆகி விடும். 

இதற்கு ஒரே வழி உங்கள் அடிப்படை பிரச்சனையை சரி செய்வது தான். அப்படி செய்யும் பொழுது முதலில் அடிப்படை பிரச்சனை சரி ஆகி பிறகு பாதிப்படைந்த தலைமுடி பிரச்சனை சரி ஆகும். தலை முடி குறைந்த அளவு பதிப்படைந்திருந்தால் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும். அதிக அளவு பதிப்படைந்திருந்தால் அது அப்படியே இருக்கும், மீண்டும் பாதிப்படையாது.  

நீங்கள் கூடுதலாக தலை முடியை நட்டு வைப்பது, வேறு ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தால்  அது செயற்கையானதாக தான் இருக்கும்.  அதனால் நம் உடலுக்கு வேறு சில பிரச்சனைகளும் ஏற்படும். ஆகையால் இயற்கையாக வாழ உங்கள் அடிப்படை ஆரோக்கியத்தை சரி செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

அடிப்படை ஆரோக்கியத்தை சரி செய்வது எப்படி என்று இந்த தலத்தில் உள்ள மற்ற பதிவுகளை பார்த்து படித்து பாருங்கள். தெளிவான விடை கிடைக்கும் . for more health related articles                                                                                     

                                                                                      - அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்

UYIRATRAL


 










Thanks for reading my article.

Contact Number for Acupuncture Treatment: +91 9443444849

Previous Post Next Post

نموذج الاتصال