uyiratral eye problems UYIRATRAL {getToc} $title={Table of Contents} |
கண்ணாடி அணிவதால் கண் பார்வை குறைபாடு சரியாகுமா?
விட்டமின் குறைபாடுடோ, உள்ளுறுப்பின் இயக்கக் குறைவோ, உடலின் கழிவுத்தேக்கமோ அல்லது தூக்கமின்மையோ என்று ஏதோ ஒரு காரணத்தால் உங்களுடைய கண்களில் கிட்ட பார்வை, தூரப் பார்வை, கண் அரிப்பு, தலைவலி, கண்வலி போன்ற குறைபாடு ஏற்படுகிறது.
கண் குறைபாட்டை சரிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?
(kan parvai athikarikka tips) ( eye problems)
குறைபாடு ஏற்பட்டுள்ள அந்த கண்களை குணமாக்க வேண்டுமா? அல்லது குறைபாடு இருந்தாலும் பரவாயில்லை என்று கண்டு கொள்ளாமல் கண்ணாடி அணிய வேண்டுமா?
கண்கள் எதனால் பாதிக்கப்பட்டது என்று கண்டறிந்து அதை சரி செய்யும் வேலையை தானே செய்ய வேண்டும்!
அதை விட்டுவிட்டு கண்ணாடி அணிந்தால் என்னவாகும்?
பாதிக்கப்பட்ட அந்த கண்களின் பவரின் அளவை நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி நிவர்த்தி செய்து கொள்ளும்.
ஆனால் நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி உங்கள் கண் பார்வையை குணமாக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதுமட்டுமின்றி பாதிப்படைந்த கண்களை குணப்படுத்துவதற்கான வேலையை செய்யாமல் கண்ணாடியை கொண்டு சமப்படுத்துவதால் அந்த கண்கள் இன்னும் மோசமான நிலையை அடைகிறது. ஆனால் நீங்கள் கண்ணாடி அணிந்திருப்பதால் அதை அறிய மாட்டீர்கள்.
நாம் எதாவது ஒன்றைப் பார்க்கும் பொழுது நம்முடைய கண்ணால் பார்க்கவில்லை கண்ணில் இருந்து கண்ணாடியில் உள்ள அந்த லென்ஸின் வழியாக ஊடுருவி பார்க்கிறோம். இது கண்களை குணமாக்குவதற்கான சரியான வழியல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கண்ணாடியை அணிந்து கொண்டு கண்களுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த எந்த உணவை சாப்பிட்டாலும் அந்த உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்கள் எந்த வகையிலும் உங்கள் கண்களை சரி செய்யாது காரணம் என்னவென்றால்,
பாதிப்படைந்த கண்களை நீங்கள் கண்ணாடியை கொண்டு சமப்படுத்தி கொண்டிருப்பதால் கண்களுக்கு தேவையான சத்துக்களை இந்த உடல் கண்களுக்கு அனுப்பாது.
நீங்கள் எந்த வகையான சத்து நிறைந்த உணவை சாப்பிட்டாலும் நீங்கள் கண்ணாடியை கழட்டும் வரை அந்த சத்துக்கள் உங்கள் கண்களுக்கு போய் சேராது.
ஆகையால் உங்கள் கண்கள் நீங்கள் கண்ணாடியை கிழட்டும் வரை பாதிப்புடனே இருக்கும்.
நாம் கண்ணாடியை அணிந்துகொண்டு கண்ணாடியின் உதவியோடு தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் கண்களால் அல்ல!
நீங்கள் உங்கள் கண்களால் பார்க்க வேண்டுமா அல்லது கண்ணாடியின் உதவியோடு பார்க்க வேண்டுமா?
நீங்கள் கண்ணாடியின் உதவியோடு பார்க்கும் வரை உங்கள் கண்களில் உள்ள அந்த குறைபாடு கடைசி வரை சரியாகாது அப்படியே தான் இருக்கும்.
கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. ஆனாலும்
uyiratral eye problems |
கண் குறைபாடு ஏற்பட மிக முக்கியமான காரணமாக இருப்பது என்ன?
கண் குறைபாடு ஏற்பட மிக முக்கியமான காரணம் உள்ளுறுப்பின் இயக்க குறைவு தான்.
(kan parvai athikarikka tips tamil)( eye problems)
கண்களில் குறைபாடு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை என்பது உள்ளுறுப்புகளை பரிசோதனை செய்து எந்த உள்ளுறுப்பு பாதிப்படைந்துள்ளதோ அந்த உள்ளுறுப்பை கண்டறிந்து அந்த உள்ளுறுப்புக்கு சிகிச்சை அளிக்கும் போது முதலில் உள்ளுறுப்பு பலமடைந்து அதன் பிறகு அதன் வெளியுறுப்பான கண்கள் குணமாகும்.
உடலில் எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த இடத்திற்கு சிகிச்சை அளிக்காமல் அதன் மூலக்காரணம் என்னவென்று கண்டறிந்து அதை சரி செய்தால் மட்டுமே எந்த ஒரு நோயையும் முழுமையாக குணப்படுத்த முடியும்.
உதாரணமாக : கண்களில் பிரச்சினை என்றால் கண்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் கண்ணாடி அணிந்தால் கண்கள் குணமாகாது. மாறாக கண்களை பராமரிக்க கூடிய உள்ளுறுப்பிற்கு சிகிச்சை செய்து உள்ளுறுப்பு பலமடைந்தால் தான் கண்கள் குணமாகும்.
கண்ணாடியை கழட்டும் பொழுது கண்களில் சில தொந்தரவுகள் ஏற்படும். கண் வலி,கண்ணில் நீர் வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம் இந்த தொந்தரவு என்பது உங்கள் கண்களை குணப்படுத்துவதற்காகவே ஏற்படுகிறது.
UYIRATRAL
நீங்கள் கண்ணாடி அணிந்தால் இந்த தொந்தரவு இருக்காது. ஆனால் நீங்கள் கண்ணாடியை கழட்டினால் தான் கண்களில் உள்ள அந்த செல்களுக்கு ஆற்றல் கிடைத்து கண்கள் குணமாகும்.
தொந்தரவுகளை நீங்கள் சகித்துக் கொள்ளும் போது தான் உங்கள் கண்களில் உள்ள செல்கள் அதன் தன்மையை பலப்படுத்திக் கொள்ளும். கண் பார்வை தெளிவாகும். ஆக நீங்கள் கண்ணாடி அணிந்தால் உங்கள் பார்வை சரியாகாது.
(kan parvai athikarikka tips tamil)( eye problems)
உங்கள் கண் பார்வை சரியாக வேண்டுமென்றால், முதலில் நீங்கள் உங்கள் கண்ணாடியை கழட்ட வேண்டும். முடிந்தளவு கண்ணாடியை பயன்படுத்தாமல் கண்களால் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
அப்பொழுதுதான் உங்கள் கண்களுக்கு ஆற்றல் கிடைக்கும் உங்கள் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்.
uyiratral eye problem |
கண்ணாடியை கிழட்டினால் மட்டும் போதுமா?
- உங்கள் வாழ்வில் நெறிமுறையில் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்.
- உங்கள் உடலின் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்.
- அப்பொழுதுதான் உங்கள் உள்ளுறுப்புகள் பலமடைந்து அதன் வெளியுறுப்பான கண்கள் தெளிவான நிலையை அடையும்.
- இரவு தூக்கம் என்பது உங்கள் கண் பார்வைக்கு மிக முக்கியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இரவு தூக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. ஆகையால் அதிகபட்சமாக இரவு 10 மணி முதல் 4 மணி வரை கண்டிப்பாக உறங்கச் செய்யுங்கள்.
இந்த உடலின் உள்ளே கழிவுகளின் தேக்கத்தாலும் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக கண்கள் பாதிக்கப்படும். ஆகையால் உடலில் கழிவுகள் சேராமல் நீங்கள் உங்கள் உணவு முறையில் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்.
எக்காரணம் கொண்டும் பசி இல்லாமல் எந்த உணவு உண்ணாதீர்கள் பசி ஏற்பட்ட பிறகு உணவு உண்ணுங்கள். பசி இல்லை என்றால் பசிக்காக காத்திருங்கள்.
இரவு மாமிச உணவுகளை உண்ணாமல் எளிமையான உணவான பழங்களை உண்ணுங்கள்.
கண்ணாடியை கழட்டி விட்டு உங்கள் வாழ்வியல் நெறி முறைகளில் ஒழுக்கத்தை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது, கண்கள் மட்டும் அல்லாமல் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் பலமடைந்து எந்த நோய்யும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் நிச்சயமாக!
- அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்