அல்சர்(ulcer) |
UYIRATRAL
அல்சர் (ulcer) நோயால் பதிப்படைந்தவர்களுக்கு வயிற்றில் ஏற்பட்ட புண்ணின் காரணமாக கடுமையான வலி ஏற்படும் இதற்கு நவீன மருத்துவத்தில் வலியை குறைக்கும் pain killer - ஐ கொடுப்பார்கள்.
{getToc} $title={Table of Contents}
வயிற்றில் உள்ள புண்ணின் காரணமாக காரமான மற்றும் சூடான உணவுகளை உண்ண வேண்டாம் என்றும், வேள வேளைக்கு சாப்பிட வேண்டும் என்றும் கூறுவார்கள். இதுவெல்லாம் நம் வலியை உணரக் கூடாது என்பதற்காகவே தவிர, அல்சரை குணப்படுத்த அல்ல.
அல்சர்(ulcer) ஏன் ஏற்பட்டது, அதை எப்படி குணமாக்குவது என்று கூறாமல் வழியை மறைக்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் வயிற்றில் உள்ள புண்ணின் தன்மை இன்னும் மோசடையுமே தவிர குணமாகாது.
இதையும் படிக்கவும்: மைதா உணவுகளை சாப்பிடலாமா?
அல்சர்(ulcer) நோயை முழுமையாக குணமாக்குவது எப்படி?
முதலில் அல்சர்(ulcer) ஏன் ஏற்பட்டது என்ற காரணம் நமக்கு தெரிய வேண்டும். அல்சர் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது நாம் பசிக்காமல் உணவு உண்பது தான். நமக்கு பசி என்ற உணர்வு ஹைட்ரோ குளோரிக் ( hydro chloric ) அமிலம் சுரப்பதால் தான் ஏற்படுகிறது.
அல்சர்(ulcer) |
இந்த ஹைட்ரோ குளோரிக் ( hydro chloric ) அமிலம் தான் அல்சர்(ulcer) ஏற்பட காரணம் என்று நவீன மருத்துவம் கூறுகிறது. ஆனால் ஹைட்ரோ குளோரிக் ( hydro chloric ) அமிலத்திற்கும் அல்சருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.
நம் வயிற்றில் இருந்து உருவாகும் ஒரு அமிலம் நம் வயிற்று பகுதியை பாதிக்குமா?
ஹைட்ரோ குளோரிக் ( hydro chloric ) அமிலம் சுரந்து நாம் சாப்பிடாமல் இருந்தால் அந்த அமிலம் நீர்த்து போய்விடுமே தவிர நம் வயிற்று பகுதியை புண்ணாக்காது. ஆனால் இது போன்று தொடர்ந்து பசி எற்பட்டு சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு உடல் மெலிதல் மற்றும் முக சுருக்கம் தான் ஏற்படும். எனவே அல்சர் வர காரணம் ஹைட்ரோ குளோரிக் ( hydro chloric ) அமிலம் அல்ல.
அப்படி என்றால் அல்சர்(ulcer) ஏற்பட காரணமாக இருப்பது நாம் பசிக்காமல் உணவு உண்பது தான்.
பசி இல்லாமல் சாப்பிடும் பொழுது அந்த உணவு ஹைட்ரோ குளோரிக் ( hydro chloric ) அமிலம் இல்லாததால் செரிமானம் ஆகாமல் வயிற்று பகுதியிலேயே தங்கி விடுகிறது. இப்படி தொடர்ந்து செய்யும் பொழுது வயிற்று பகுதியில் கழிவுகள் தேங்கி நாளடைவில் அந்த கழிவுகள் கெட்டு போய் அதில் இருந்து ஒரு வகையான அமிலம் சுரக்கிறது.
அந்த மோசமான அமிலத்திற்கு தான் அரிக்கும் தன்மை உள்ளது. இந்த அமிலம் வயிற்றில் படும் போது தான் புண் ஏற்படுகிறது. இது தான் அல்சர்(ulcer) ஏற்பட காரணம் ஆகும். ஆக பசிக்காமல் சாப்பிட்டால் தான் அல்சர்(ulcer) என்ற நோய் ஏற்படுத்துகிறது.
அல்சர்(ulcer) |
அல்சர்(ulcer) நோயை குணப்படுத்த பசித்த பிறகு ரசாயன கலப்பு இல்லாத பிடித்த உணவை உண்பதே சிறந்த ஒரே வழியாகும்.
அக்கு ஹீலர் - ச. சையத் அஜ்மல்