{getToc} $title={Table of Contents}
நம் வயிற்றில் இயற்கையாக சுரக்கக்கூடிய அமிலம் நம் வயிற்று பகுதியை அரிக்குமா?
ஏன் இரைப்பையில் புண் ஏற்பட்டது?(What is the main cause of Ulcer?
ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலம் என்பது நமக்கு உடலில் ஆற்றல் தேவை ஏற்படும் பொழுது சுரக்கின்றது .இதனால் தான் பசி என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலம் சுரந்தவுடன் நாம் ஏதேனும் உணவு உண்ண வேண்டும். அந்த உணவு ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலத்துடன் வினைபுரிந்து அந்த உணவில் உள்ள சத்துக்களை பிரிக்க உதவுகிறது.
ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலம் இல்லாத உணவுகளில் சத்துக்கள் முழுமையாக பிரிக்கப்படுவதில்லை. மாறாக அந்த உணவு நம் வயிற்று பகுதிக்கு பாரமான கழிவாக மாறுகிறது. அதனால் தான் பசித்து புசி என்று கூறப்படுகிறது. ஆனால் நாம் இன்று பெரும்பாலும் பசித்து உணவு உண்பதில்லை. அதனால் தான் நமக்கு ஆற்றல் பற்றக்குறை ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த உணவு செரிமானமாகாமல் சத்துக்கள் பிரிக்க முடியாத கழிவாக மாறுகிறது.
அல்சர்(Ulcer) |
இந்த கழிவுகள் நம் வயிற்று பகுதிகளில் தங்கி விடுகிறது. அதனால் தான் மலம் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
நாம் மூன்று வேலை சாப்பிட வேண்டும் என்ற தவறான முறையை கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம்.
"வேளா வேளைக்கு சாப்பிட வேண்டும்" என்று நம் முன்னோர்கள் கூறியது கடிகார நேரத்தை பார்த்து இல்லை. இந்த உடலுக்கு எந்த நேரத்தில் உணவு தேவையோ அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது தான் அதன் சரியான பொருள்.
அதனால் மூன்று வேலை சாப்பிட வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இந்த உடலுக்கு எந்த வேளைக்கு உணவு தேவையோ அப்போது நமக்கு பசி என்ற உணர்வு ஏற்படும். அந்த நேரம் சாப்பிட்டால் சத்தாக மாறும்.
இன்று பெரும்பாலும் நாம் பசியை உணராமல் தொடர்ந்து பசி இல்லாமல் உணவு உண்பதால் அந்த உணவுகள் முழுமையாக செரிமானம் ஆகாமல் கழிவாக வயிற்று பகுதியில் தங்கி விடுகிறது.
இப்படி தங்கிய கழிவுகள் நாளைடைவில் கெட்டு போய் அந்த கழிவுகளில் இருந்து ஒரு வகையான அமிலம் சுரக்கிறது.
இந்த மோசமான அமிலத்திற்கு தான் இரைப்பையை அரிக்கும் தன்மை உள்ளது. இந்த அமிலம் தான் வயிற்று பகுதியில் பட்டு புண்ணை ஏற்படுத்துகிறது. அல்சர் ulcer நோய் ஏற்பட இதுவே மிக முக்கிய காரணமாகும்.
மாறாக ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலத்தால் புண் ஏற்படுவதில்லை. நமக்கு பசிக்கும் போது உருவாகும் ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலம் நாம் சாப்பிடாமல் இருந்தால் அந்த அமிலம் நம் வயிற்றிலேயே நீர்த்து போய்விடுகிறது.
வயிற்றிலேயே சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலத்தால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.
ஆனால் ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலம் சுரந்து பசி ஏற்பட்டு சாப்பிடாமல் இருந்தால் நமக்கு ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும்.
வேலையின் காரணமாக பசி ஏற்படும் போது சாப்பிடாமல் ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலம் நீர்த்து போன பிறகு சாப்பிட்டால் சத்துக்கள் கிடைக்காமல் ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு உடல் மெலிதல்(Body slimming) , முக சுருக்கம்(Face wrinkles), மந்தத் தன்மை(Indolence) போன்றவை ஏற்படும்.
அல்சர்(Ulcer) ஏற்பட காரணம் நாம் பசிக்காமல் சாப்பிடும் போது அந்த உணவு ஹைட்ரோ குளோரிக் (Hydro Chloric ) அமிலம் இல்லாததால் செரிமானம் ஆகாமல் கழிவாக மாறி, வயிற்றிலேயே தங்கி கெட்டு புளித்து போய் அதிலிருந்து ஒரு வகையான அமிலம் சுரக்கும். புளித்து போன அந்த அமிலத்திற்கு தான் அரிக்கும் தன்மை உள்ளது. அந்த அமிலம் நம் வயிற்று பகுதியில் பட்டு, நம் வயிற்று பகுதியில் புண் ஏற்பட்டு அல்சர் என்ற நோய் ஏற்பட காரணமாக அமைகிறது.
''ஆக அல்சர்(Ulcer) ஏற்பட காரணம் , பசிக்காமல் சாப்பிடுவதான் ''
அதேபோல பசி ஏற்பட்டு சாப்பிடாமல் இருந்தால் உணவின் மூலம் கிடைக்க வேண்டிய சத்துகள் கிடைக்காமல் ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு உடல் மெலிதல்(Body slimming) , முக சுருக்கம்(Face wrinkles), மந்தத் தன்மை(Indolence) போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
எனவே பசித்து சாப்பிடாமல் இருந்தாலும் பசிக்காமல் சாப்பிட்டலும்நமக்கு நோய் ஏற்படும். (பசித்து புசி) பசித்தவுடன் உணவு உண்பதே ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்த வழி.
" பசியறிந்து அளவறிந்து உணவருந்து
நோய்க்கு அதுவே மருந்து "
- அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்
இதையும் படியுங்கள்: BP (உயர் இரத்த அழுத்தம்) என்றால் என்ன? குணப்படுத்துவது எப்படி?