UYIRATRAL
இந்த பூமி எப்படி மிகச் சரியாக இயங்கி கொண்டு இருக்கிறதோ அதே போல இந்த மனித உடலும் மிக சரியாக தான் இயங்கி கொண்டு இருக்கிறது. அப்படி என்றால், நமக்கு ஏன் நோய் ஏற்படுகிறது?
{getToc} $title={Table of Contents}
மனித உடலில் ஏற்பட கூடிய அனைத்து நோய்களுக்கும் காரணம் என்ன?
நம் உடலில் உணவு காற்று நீர் இவைகளில் இருந்து சத்துகள் பிரிக்கப்பட்டு கழிவுகள் இயல்பாக வெளியேற வேண்டும், அப்படி கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கினால் அதுவே நோய்களுக்கான முக்கிய காரணம் ஆகும்.
இயல்பாக வெளியேற வேண்டிய கழிவுகள் உடலில் ஏன் தேங்குகிறது ?
நம்முடைய அறியாமையின் தவறுகளும் ரசாயன உணவுகளும் தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த காரணங்களால் நம் உடலில் கழிவுகள் தேங்குகின்றன. இந்த கழிவுகளை நம் உடல் இலகுவாக வெளியேற்றி விடும். ஆனால் நாம் இந்த தவறுகளை தொடர்ந்து செய்து வருவதால் இலகுவாக வெளியேற வேண்டிய இந்த கழிவுகள் தேக்கமுற்ற கழிவாக மாற்றம் அடைகின்றது.
இப்படி தேக்கமுற்றதாக மாறிய கழிவுகளை, இந்த உடல் வெளியேற்றும் போது தான் உடலில் சில தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இந்த தொந்தரவுகளை தான் நாம் நோய் என கருதி, அந்த தொந்தரவில் இருந்து விடுபடுவதற்காக நாம் ரசாயன மருந்துகளையும் பலவகையான சிகிச்சைகளையும் மேற்கொள்கிறோம். நவீன மருத்துவங்களும் தொந்தரவுகளை உள்ளடக்கி, நோய்களை கட்டுப்படுத்தும் சிகிச்சையை தான் செய்கின்றன.
தொந்தரவுக்கு பயந்து வெளியேற்ற வேண்டிய கழிவுகளை உள்ளே அடக்குவதால் தேக்கமுற்ற கழிவுகள் நச்சு கழிவாக மாற்றம் அடைகிறது. இந்த நச்சு கழிவுகள் உடலில் உள்ள உறுப்புகளில் தங்குவதால் அந்த உறுப்புகளை நச்சு கழிவுகள் பாதிப்படைய செய்கிறது. இதுவே மிகப்பெரிய நோயாக மாறுகிறது. உறுப்புகளுக்கு ஏற்றார் போல் நோய்களுக்கு பெயர் சூட்டப் படுகிறது. நவீன மருத்துவங்களில் இப்படி பாதிப்படைந்த உள்ளுறுப்புகளை சரி செய்யும் வேலையை செய்யாமல் வெட்டி நீக்கி வாழ்நாள் நோயாளியாக மாற்றி விடுகின்றனர்.
ஆனால் நம் உடலில் எதிர்ப்பு ஆற்றல், அந்த தேங்கிய நச்சு கழிவுகளை நம் உடலில் இருந்து வெளியேற்றியே ஆக வேண்டும் என்பதற்காக, பல வழிகளில் வெளியேற்றும் வேலையை செய்து கொண்டே இருக்கும். அப்போது நமக்கு சில தொந்தரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். நாம் அந்த தொந்தரவுகளில் இருந்து விடுபடுவதற்காக ரசாயன மருந்துகளையும் பல வகையான சிகிச்சைகளையும் மேற்கொண்டே இருப்போம். இதுவே நோய்க்கான காரணம் ஆகும்.
நோய்களை குணப்படுத்த நிரந்தர தீர்வு என்ன?
உங்கள் நோய்களை முழுமையாக குணமாக்கி அதில் இருந்து விடுபட அக்குபங்சர் சிகிச்சை மூலம் உங்கள் உடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றி உங்கள் தொந்தரவுகளை குறைத்து கழிவுகளால் பாதிப்படைந்த உள்ளுறுப்புகளை பலப்படுத்தி நீங்கள் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான சிகிச்சை அளிக்கப்படும். அக்குபங்சர் சிகிச்சை மூலம் உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
மரபு வழி அக்குபங்சரில் நோய்களை குணப்படுத்தவே சிகிச்சை அளிக்கப்படும், கட்டுப்படுத்த அல்ல. குணப்படுத்தும் போது தொந்தரவுகள் ஏற்படும் அது நோய்கள் அல்ல.
அக்கு ஹீலர் - ச. சையத் அஜ்மல்
UYIRATRAL