அக்குபங்சர்- Acupuncture
அக்கு பஞ்சர்(Acupuncture) |
அக்குபங்சர் என்றால் என்ன? - What is Acupuncture?
அக்குபங்சர்(Acupuncture) என்பது நம் உடலின் எதிர்ப்பாற்றலை கொண்டு நோய்களை குணப்படுத்தும் ஒரு மருத்துவ முறையாகும். ஊசி அல்லது கை விரல் கொண்டு தோலின் மேற் பகுதியில் சிகிச்சை அளிக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட அக்குபங்சர் புள்ளியை தேர்ந்தெடுத்து தொடுவதன் மூலம் உடலில் ஏற்பட்ட நோய்களை குணப்படுத்த முடியும்.
நம் உடலின் சக்தி ஓட்டப்பாதையில் உள்ள குறைபாடே நோயாகும். அக்கு பஞ்சர் பரிசோதனை மூலம் சக்தி ஓட்டப் பாதை குறைபாட்டின் மையத்தை அறிந்து அந்த புள்ளியினை தொடுவதன் மூலம் நோய் குணமாகிறது.
நாம் இந்த பூமியில் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக தான் நிற்கிறோம், நடக்கிறோம். இந்த பூமி நம்மை பிடித்து இழுத்து கொண்டிருக்கிறது. அதே போல தான், இந்த பூமியை சுற்றியுள்ள பிரபஞ்ச ஆற்றலை நம் உடல் ஈர்த்து உள்ளுறுப்புகளுக்கு கொடுத்து கொண்டிருக்கிறது. அப்படி கொடுத்தால் தான் நம் உடல் ஒருங்கமைவோடு இயங்கும்.
பிரபஞ்ச ஆற்றலை இந்த உடல் எவ்வாறு ஈர்க்கிறது என்றால், நம் தோலின் மேலோட்டமாக உள்ள அக்குபங்சர் சக்தி ஓட்டப்பாதையின் புள்ளிகள் மூலமாக ஈர்த்து உள்ளுறுப்புகளுக்கு கொடுக்கிறது.
அக்குபங்சர்(Acupuncture) சக்தி ஓட்டப்பாதையின் மூலமாக உள்ளுறுப்புகளுக்கு கிடைக்க வேண்டிய பிரபஞ்ச ஆற்றல் எப்போது தடைபடுகிறதோ அப்போது தான் நமக்கு நோய் ஏற்படுகிறது.
பிரபஞ்ச ஆற்றல் உள்ளுறுப்புகளுக்கு கிடைக்காமல் ஏன் தடை படுகிறது?
நாம் நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறுவது தான் இந்த நிலை ஏற்பட காரணமாகிறது. அதாவது நம் உடலின் உணர்வுகளை மதிக்காமல் இயற்கைக்கு எதிரான சில செயல்களை நாம் செய்கிறோம். அதை நம்முடைய எதிர்ப்பாற்றல் சரி செய்து கொள்ளும்.
ஆனால் நாம் அந்த செயல்களை தொடர்ந்து செய்து வருவதால் நம் உடலில் கழிவுகள் தேங்குகிறது. நாம் அதை பொருட்படுத்தாமல் நம்முடைய இயற்கை விதி மீறலை தொடர்வதால் தேங்கிய கழிவுகள் நம் உடலில் தேக்கமுற்ற கழிவுகளாக மாறுகிறது.
இந்த கழிவுகள் அக்குபங்சர் சக்தி ஓட்டப்பாதையில் தடையை ஏற்படுத்தி உள்ளுறுப்புக்களுக்கு கிடைக்க வேண்டிய ஆற்றலை தடுக்கிறது.
இப்போது அக்குபங்சர்(Acupuncture) சக்தி ஓட்டப்பாதையில் உள்ள கழிவுகளை நம் எதிர்ப்பாற்றல் வெளியேற்றும் போது தான் நமக்கு சில தொந்தரவுகள் ஏற்படுகிறது. இந்த கழிவுகள் என்பது உடலில் இருந்து வெளியேற வேண்டியவை. ஆனால் நாம் தொந்தரவில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக ரசாயன மருந்துகளை பயன்படுத்தி தொந்தரவுகளை உள் அடக்குவதால், இது பெரும் நோயாக மாறுகிறது.
அக்குபங்சர் எவ்வாறு வேலை செய்கிறது? - What does an acupuncture do?
அக்குபங்சர்(Acupuncture) சிகிச்சையில் , சக்தி ஓட்டப்பாதையில் ஏற்பட்டுள்ள தடையை நாடி பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்குரிய புள்ளியை தூண்டுவதன் மூலம் பாதிப்படைந்த உள்ளுறுப்புகளுக்கு சக்தி கிடைத்து நோய்கள் குணமாகிறது.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள பிரபஞ்ச ஆற்றலை உள்ளுறுப்புகளுக்கு கொடுத்து ஒழுங்கமைவோடு இந்த உடலை இயங்கச் செய்வது அக்குபங்சர் மருத்துவத்தின் வேலையாகும்.
அக்குபங்சரின் பயன்கள் - What are the Benefits of Acupuncture?
- நோய்களின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதை குணப்படுத்த முடியும்
- நோய் முற்றிய நிலையிலும் அதை வேரோடு குணப்படுத்த முடியும்.
- அனைத்து நோய்களும் எந்த ஒரு பக்க விளைவின்றி குணப்படுத்த முடியும்
- ரசாயன மருந்துகள் ஏதும் இன்றி நோய்கள் குணமாகிறது.
- அக்குபங்சரில் உடலின் நோய்கள் மட்டுமின்றி மன நோய்களையும் குணப்படுத்த முடியும்.
- குணமாகாத நோய்கள் என்று அறியப்படும் சர்க்கரை(sugar), இரத்தக்கொதிப்பு (Bp), கேன்சர்(cancer) போன்ற நோய்களையும் குணப்படுத்த முடியும்.
அக்குபங்சர் சிகிச்சை எடுப்பதால் ஆபத்து எதேனும் உண்டா? - What are the risks of Acupuncture?
அக்குபங்சர் என்பது உங்கள் எதிர்ப்பாற்றலை கொண்டு நோய்களை குணப்படுத்தும் ஒரு மருத்துவ முறையாகும். ரசாயன மருந்துகள் ஏதும் இல்லாத அக்குபங்சர்(Acupuncture) சிகிச்சை முறையினால் எந்த ஒரு பக்க விளைவுகளோ, ஆபத்தோ ஏற்படாது.
அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்