காய்ச்சல் (fever) ஏற்படும் போது வாய் ஏன் கசப்பாக இருக்கிறது தெரியுமா? (health)
காய்ச்சல் fever என்பது நோயல்ல. அது எதிர்ப்பாற்றலின் immunity மறு பிரவேசம் என்று போன கட்டுரையில் பார்த்தோம். கழிவுகள் அல்லது கிருமிகளை அழிப்பதற்காகவே காய்ச்சல் உடலில் ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் ஏற்படும் போது காய்ச்சலை தடை செய்வதற்க்கான எந்த வேலையையும் செய்ய கூடாது.
காய்ச்சல் ஏற்படும் போது உடலில் தொந்தரவாக தான் இருக்கும். அந்த தொந்தரவு என்பது நோயல்ல. நோயை குணமாக்கும் வேலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
காய்ச்சலின் fever போது மிக குறைந்த அளவு பசியும் வாயில் கசப்பு தன்மையும் தான் இருக்கும். ஏனென்றால் உடலின் உள்ளே தேங்கிய கழிவுகளை எரிக்கும் வேலையை அல்லது கிருமிகளை அழிக்கும் வேலையை நம் உடலின் எதிர்ப்பாற்றல் செய்து கொண்டிருக்கும்.
அந்த நேரத்தில் உணவுகளை செரிமானம் செய்யும் நிலையில் நம் உடல் இல்லை. ஆகையால் எந்த உணவும் உண்ண வேண்டாம் என்ற உடலின் அறிவிப்பு தான் இந்த கசப்பு தன்மை என்ற அறிகுறி. ஆகையால் காய்ச்சலின் போது வாய்க்கு பிடிக்காமல் எந்த உணவையும் உண்ண கூடாது.
உதாரணமாக, கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் உங்கள் வீட்டின் உள்ளே வந்து விட்டது, எனவே நீங்கள் உங்கள் வீட்டை வேகமாக சுத்தம் செய்து கொண்டிருக்கீறிர்கள். வீட்டில் உள்ளே துர்நாற்றமாக இருக்கிறது, இப்போது உங்களுக்கு வீட்டின் உள்ளே உணவு பரிமாறினால் நீங்கள் எப்படி சாப்பிடுவீர்கள் என்று யோசித்து பாருங்கள்.!!
காய்ச்சல் ( fever) |
இதே போல் தான் நம் உடலின் உள்ளே கழிவுகளை நம் எதிர்ப்பாற்றல் immunity அளித்து சுத்தம் செய்து கொண்டிருக்கும் வேலையில் இந்த உடலால் எந்த உணவையும் செரிமானம் செய்ய இயலாமல் இருக்கும், இப்போது நீங்கள் எந்த உணவையும் உண்ண கூடாது என்பதற்காக வாயில் கசப்பு தன்மையை நம் உடல் ஏற்படுத்தி வைத்திருக்கும். இதுபோன்ற நேரத்தில் நாம் எந்த உணவையும், உண்ண கூடாது. அப்படி உணவு உண்ணாமல் இருப்பதால் நமக்கு எந்த பலவீனமும் ஏற்படாது.
நிச்சயமாக பயங் கொள்ள தேவையில்லை. அதையும் மீறி நம்முடைய அறியாமையின் காரணமாக நம் உணவு உண்டால் முதலில் வாந்தி ஏற்படும். அதாவது இப்போது நான் செரிமானம் செய்யும் நிலையில் இல்லை என்று உணவுகளை திருப்பி அனுப்புவது தான் வாந்தியாகும். அதையும் நாம் விளங்காமல், இன்னும் நாம் நன்றாக யோசித்து வாந்தி வராத புளிப்பான உணவை உண்ணுவோம்.
நாம் நம் அறியாமையின் காரணமாக உணவு உண்டு அது இரைப்பைக்கு சென்றால், நம் எதிர்ப்பாற்றல், கழிவுகள் மற்றும் கிருமிகளை அழிக்கும் வேலையை அப்படியே விட்டு விட்டு,இப்போது உண்ட உணவு இரைப்பையில் தங்கினால் நஞ்சாக மாறிவிடும் என்பதால், நம் எதிர்ப்பாற்றல் முதலில் செரிமான வேலையை செய்து விடும். இதனால் நம் உடலின் சுத்தம் செய்யும் வேலை தடை பட்டு விடும்.
எனவே காய்ச்சல் fever ஏற்படும் போது வாய் கசப்பாக இருக்க காரணம், என்னவென்றால் நாம் எந்த உணவும் உண்ண கூடாது என்பதற்காக தான், என்பதை புரிந்து கொள்ளு வேண்டும்.
காய்ச்சலின் போது பசி மற்றும் ருசியை உணர்ந்து உணவருந்துங்கள். பன்(bun), பிரட் (bread), டீ (tea), பிஸ்கட்(biscuit) என்று கனமான மைதா உணவுகளை முழுமையாக தவிர்த்து கொள்ளுங்கள். பசியின் அளவு குறைவாக இருந்தால் எளிமையாக பழ உணவுகளை உண்ணுங்கள்.
காய்ச்சல் ( fever) |