காய்ச்சல்(fever) என்பது நோயா?
நம் உடலின் சராசரி வெப்ப நிலை 98.4° F என்ற விகிதத்தில் தான் இருக்கும். அப்படி இருக்க திடீரென்று 106° F வரை வெப்ப நிலை அதிகரிக்க காரணம் என்ன?
அந்த காரணம் எல்லாம் தேவை இல்லை காய்ச்சல் (fever) வந்தவுடன் ஏதோ ஒரு மருந்து அல்லது ஒரு ஊசி போட்டால் காய்ச்சல் சரி ஆகி நம் உடலின் வெப்ப நிலை குறைந்து நாம் குணமாகிவிடலாம் என்று தான் அனைவரும் நினைத்து கொண்டு செயல் படுகிறோம்.
ஆனால் இது முற்றிலும் மிகப்பெரிய தவறு .
நம் உடலின் வெப்ப நிலை 98.4° F என்ற விகிதத்தில் தான் எந்த நிலையிலும் இருக்கும். அது கடும் மழை , குளிர், மற்றும் வெயில் என்று எந்த கால நிலை ஆனாலும் சரி, நீங்கள் எந்த நாட்டிற்கு சென்று மைனஸ் டிகிரியில் வாழ்ந்தாலும் சரி , 98.4° F என்ற சராசரி வெப்ப நிலையில் நம் உடலில் எந்த மாற்றமும் இருக்காது.
UYIRATRAL
ஏனென்றால் நம் உடல் அந்த அளவிற்கு மிக துல்லியமாக இயங்கி கொண்டிருக்கிறது. 37° அதாவது 98.4° F இருந்தால் தான் நம் உடல் ஆரோக்கிய நிலையில் உள்ளது என்று அர்த்தம். அப்படி இருக்க நம் உடலில் திடீர் என்று வெப்ப நிலை 100° F -ஐ தாண்டி செல்ல காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்கிறோமா?
அதற்க்கு இரண்டு முக்கிய காரணம் உண்டு:
1. நவீன மருத்துவம் கூறும் கிருமிகள்.
2. உடலின் கழிவு தேக்கம்.
இவைகள் தான் நம் உடலின் வெப்ப நிலையை அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும்.
முதலில் கிருமிகள் பற்றி பார்க்கலாம்.
நம் உடலில் எதோ ஒரு வகையில் உடலின் உள்ளே கிருமிகள் சென்று விட்டால், உடனே அந்த கிருமியை அழிக்க வேண்டும் என்பதற்காக நம் உடலின் எதிர்ப்பு ஆற்றல் வெப்பநிலையை அதிகரித்து காய்ச்சல்(fever) மூலம் அந்த கிருமிகளை அளிப்பதற்கான வேலையை செய்கிறது.
அப்படி இருக்கும் போது நீங்கள் காய்ச்சலை மருந்துகளை கொண்டு நிறுத்தினால் உடலின் உள்ளே சென்ற கிருமிகளை அழிக்கும் வேலையை தடை செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
அவ்வாறு நீங்கள் காய்ச்சலை(fever) தடை செய்தால் உள்ளே சென்ற கிருமிகள் வளர்ச்சி அடைந்து உடலின் உள்ளுறுப்புகளை பாதிப்படைய செய்கிறது.
ஆனாலும் நம் உடலின் எதிர்ப்பு ஆற்றல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் காய்ச்சலை உண்டு பண்ணி அந்த கிருமிகளை அளிக்கும் வேலையை செய்து கொண்டே இருக்கும்.
இது புரியாத நாம், நமக்கு ஏன் அடிக்கடி தொடர்ந்து காய்ச்சல்(fever) உருவாகிறது என்று அதற்கு தொடர்ந்து ரசாயன மருந்துகளை பயன்படுத்தி காய்ச்சலை தடை செய்து கொண்டே இருப்போம். இதுவே பல வருடங்கள் கழித்து பெரும் நோயாக மாறுகிறது.
மற்றொரு காரணமும் உள்ளது, அது நம் உடலின் கழிவு தேக்கம். நம்முடைய தவறான உணவு பழக்கம் மற்றும் புரிதலின்மையின் காரணமாக நம் உடலில் கழிவுகள் தேக்க மடைகிறது, இப்படி தேங்கிய கழிவுகளை நம் உடல் பல வழிகளில் வெளியேற்ற முயற்சி செய்யும். வாந்தி, பேதி, சளி, இருமல் இவைகளில் வெளியேற்ற நாம் அனுமதிக்காமல் இருந்தால், காய்ச்சல் மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும்.
உடலின் வெப்ப நிலையை அதிகரித்து குப்பைகளை எரிப்பது போல், எரித்து அளிக்கும் வேலையை காய்ச்சல்(fever) மூலம் நம் எதிர்ப்பு ஆற்றல் செய்கிறது. ஆக கிருமிகள் அல்லது கழிவுகள் , என எந்த காரணத்தினால் காய்ச்சல் ஏற்பட்டாலும் அது நோய் அல்ல.
கிருமிகளை அளிக்கவும் கழிவுகளை எரிக்கவுமே காய்ச்சல் ஏற்படுகிறது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே காய்ச்சல் என்பது நோய் அல்ல அது எதிர்ப்பு ஆற்றலின் மறுபிரவேசம். காய்ச்சலுக்கு எந்த ஒரு ரசாயன மருந்தையும் உட்கொண்டு உங்கள் எதிர்ப்பு ஆற்றலை வீணடிக்காதீர்கள்.
- காய்ச்சல் வந்தால் அமைதியாக கண்களை மூடி ஓய்வு எடுங்கள்.
- பசி மற்றும் சுவையை உணர்ந்து உணவு அருந்துங்கள்.
காய்ச்சல் இருக்கும் போது தொந்தரவாக தான் இருக்கும். தொந்தரவாக இருக்கிறது என்று மருந்துகளை கொண்டு காய்ச்சலை நிறுத்தினால் கழிவுகள் அல்லது கிருமிகள் உள்ளே தங்கி நோய் அதிகமாகும்.
உங்கள் தொந்தரவுகளை குறைத்து வேகமாக கழிவுகள் மற்றும் கிருமிகளை அளிப்பதற்கு தேவையான எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்த அக்குபங்சர் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.