இந்த உலகில் சிறந்த செல்வம் எது?
பணமா? பொருளா? கல்வியா?
பணம், பொருள், கல்வி ஆகிய இந்த மூன்றையும் ஆட்சி செய்ய தேவையான ஆரோக்கியமே( health ) இந்த உலகின் சிறந்த
செல்வம்.
அப்படிப்பட்ட சிறந்த செல்வமான ஆரோக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமென்றால் நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும்.
நோயின்றி வாழ வேண்டுமென்றால், எது நோய் என்ற அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும்.
எது நோய் என்ற அடிப்படையை தெரிந்து கொள்ள, நோய் எது? நோயின் விளைவு எது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நோய் எது? நோயின் விளைவு எதுவென்றால், உடல் உள்ளுறுப்பின் பாதிப்பே நோய்,
உடல் உள்ளுறுப்பின் பாதிப்பால் ஏற்படும் தொந்தரவே விளைவு.
நோயின் விளைவுக்கு சிகிச்சை செய்யாமல் நோய்க்கு சிகிச்சை செய்ய வேண்டும்.
நோய்க்கு சிகிச்சை செய்யாமல் நோயின் விளைவுக்கு சிகிச்சை செய்து தொந்தரவுகளை உள் அடக்குவதால் உடலின் உள்ளே கழிவுகள் தேக்கமடைகின்றன.
உடலின் கழிவுகள் எந்த உறுப்பில் தேக்கமடைகின்றதோ அந்த உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
உடலின் கழிவு தேக்கத்திற்கு தவறான நோய் சிகிச்சை முறை ஒரு காரணம் என்றால், நம்முடைய தவறுகளே மற்றொரு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய தவறு எதுவென்றால் இயற்கைக்கு எதிரானதே!
இயற்கைக்கு எதிரானது எதுவென்றால் உடலின் உணர்வை புறக்கணிப்பது.
உடலின் உணர்வை புறக்கணிப்பது என்றால் பசி, தாகம், ஓய்வு, தூக்கம் இவைகளை உணராமல், தொடர்ந்து பசி இல்லாமல் உணவு உண்பது, பசிக்கும் போது உணவு உண்ணாமல் இருப்பது, இரவு தூக்கத்தை வீணடிப்பது.
இது போன்ற உடலின் உணர்வை புறக்கணிக்காமல் பசிக்கும் போது மட்டும் உணவு உண்டு, தாகத்திற்கு தண்ணீர் அருந்தி, இரவு கண்டிப்பாக உறங்கி, தேவைக்கு உடலுக்கு ஓய்வு கொடுக்கும் போது உடலில் தேங்கிய கழிவுகள் வெளியேறி உடலின் உள்ளுறுப்புகள் பலமடைந்து எந்த நோயுமின்றி இந்த உலகின் சிறந்த செல்வமான ஆரோக்கியம் health) என்ற செல்வதுடன் நிம்மதியாக வாழலாம்.
"பசியறிந்து அளவறிந்து உணவருந்து:
நோய்க்கு அதுவே மருந்து."
அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்
மேலும் படிக்க : https://www.uyiratral.com/search
Tags
health